பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தெய்வமனம், விளையாடும் பருவத்து இளமகளிரை வருத்துதல் உண்டென்பது பண்டைத் தமிழர் வாழ்வியலிற் காணப்பட்ட நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கை

“முருகன் ஆரணங்கு என்றலின்” (அகம். 98) "அன்னைக்கு முருகென மொழியும் வேலன்”

“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி

அறியா வேலன் வெறியெனக் கூறும் (ஐங்குறு.243) "நெடுவேள் அணங்குறு மகளிரின் ஆடுகளம் கடுப்ப’

(குறிஞ்சிப்பாட்டு)

என உடன்பாட்டானும்,

“அருந்திறல் கடவுளல்லன்

பெருந்துறைக் கண்டிவள் அணங்கியோனே” (ஐங். 182)

“விறல்வேள் அல்லன் இவள் அணங்கியோனே'

(ஐங். 250)

என எதிர்மறை முகத்தானும் வலியுறுத்தப் பெற்றுள்ளமை காண்க. அகத்திணை ஒழுகலாற்றில் தலைமகளது வருத்தம் தீர முருகனை வழிபட்டு நிகழ்த்தப்பெறும் இவ்வெறியாடல் தலைவியின் மனையகத்தே நிகழும் என்பது,

“உருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇக்

கடம்பும் களிறும் பாடி துடங்குபு தோடும் தொடலையும் கைக்கொண்டு அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ" (அகம், 138) “கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற். 34)

எனவரும் தொடர்களாற் புலனாம். தலைமகளது நோயின் காரணம் இதுவெனவுணராத செவிலி முருகபூசை பண்ணுபவனும் அம்முதல்வனதருளால் நிகழ்ந்ததனை உணர்ந்து கூறவல்ல முதுவாய்மை படைத்தவனும் ஆகிய வேலனை வினவ, அவன் அந்நோய்க்குரிய காரணத்தைக்