பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சொல்லியதாகும். மணல் பரப்பிய மனையின் எல்லைக் கண்ணே கழங்குபார்த்து இந்நோய் முருகனால் வந்ததென்று வேலன் அன்னைக்குக் கூறுகிறான். அவன் நின் மெலிவிற்குக் காரணமாகிய தலைவனை அறியாதவனாயினான். அதனால் நினது களவொழுக்கம் அவனுக்குப் புலனாகாதாயிற்று; அத்தகைய வேலன் நீடு வாழ்வானாக என வேலனை வாழ்த்துவது போன்று வெறிவிலக்கிய குறிப்பினது ஆதல் காணலாம். இவ்வாறு வெறிவிலக்கல் என்னும் துறையி லமைந்த பாடல்கள் தலைவியின் மெலிவிற்குக் காரணம் முருகனது அண்ங்கன்று என வற்புறுத்தும் நிலையில் அமைந்தனவே அன்றி முருகவேளுக்குச் செய்யும் வழிபாட்டை விலக்கும் குறிப்பினவல்ல வென்பதை மனங் கொளல் வேண்டும். குறிஞ்சி நில மக்கள் தம் குல முதலாகிய முருகன் மலை மேலெழுந்தருளி நின்று தாம் படைக்கும் படைப்புப் பொருளை ஏற்றுக்கொள்வான் என அன்பு நீங்கா அச்சமுடன் அம்முதல்வனை வழிபட்டார்கள் :

“மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறுஉம்

அணங்கென அஞ்சுவர் சிறுகுடியோரே” (கலி. 52)

தலைவியின் மெலிவகற்றல் வேண்டி மனை வரைப்பில் நள்ளிரவில் நிகழும் அகத்தினை ஒழுகலாறாகிய இவ்வெறியாடலேயன்றி உலக நலங்குறித்துப் பலரும் கான நிகழும் புறத்தினை பற்றிய வெறியாடல்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டயர்ந்த காந்தளும்” (தொல். புறம் 5)

'வெறியாடுதலையறியும். சிறப்பினையுடைய செவ்விய வாயினை உடைய வேலன்' எனப் பொருள் வரைந்த இளம்பூரணர், “காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார் உளராகலின், வெறியட்டயர்ந்த காந்தளென்றார். அன்றியும், காந்தளென்பது மடலேறுத லான் அத்துணை ஆற்றலாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி காந்தள் எனவும் பெயராம். இதனானே காம வேட்ைைகயின் ஆற்றாளாய பெண்பாற் பக்கமாகிய