பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

241


வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந்நிலத்திற்குச் சிறந்தமை அறிக” என விளக்குவர். காந்தள் எனபதனைத் தலைவன் மடலேறுதற்குப் பெயராக வழங்குவார் கருத்தை ஏற்று அங்ங்ணம் மடலேறும் அளவிற்கும் ஆற்றாளாய தலைவி மாட்டுத் தோன்றும் வெறியும் காந்தள் எனப் பெயர்பெறும் என்பதும் இதனால் காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய அகத்தினைபற்றிய வெறியாடலும் அக்குறிஞ்சி நிலத்துள்ளார் அரசனது வெற்றியை விரும்பி நிகழ்த்தும் புறத்தினைபற்றிய வெறியாடலும் உடன்கொள்ளப்படும் என்பதும் புறத்தினைபற்றிய வெறியாடல் குறிஞ்சி நிலத்திற்குச் சிறந்ததென்பதும் இளம்பூரணர் கருத்தாதல் மேற்குறித்த அவரது உரைத்தொடராற் புலனாம்.

செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலன் என்றார். காந்தள் தான் சூடுதலிற் காந்தள் என்றார். வேலனைக் கூறினமையின் கணிகாரிகையும் கொள்க. காந்தளை உடைமையானும் பனந்தோடுடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதானானும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை; ஒழிந்தோராடுதல் சிறுபான்மை என்றுணர்க. இது சிறப்பறியா மகளிர் ஆடுதலிற் புறனாயிற்று. வேலன் ஆடுதல் அகத்தினைக்குச் சிறந்தது’ என்பர் நச்சினார்க்கினியர். கணிகாரிகையாவாள் வேலன் ஆடும் வெறிக்கூத்தினை யாடுபவள். சிறப்பறியா மகளிர் என்றது, வெறியறி சிறப்பின் வேலனைப் போன்று தெய்வத்திற்குச் செய்யும் கடன்களாகிய பூசை முறையினை அறியாத மகளிரை, மகளிர் ஆடும் வெறியாடல் புறனாம் என்பதும் வேலன் ஆடும் வெறியாடல் அகனாம் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்து. வேலன் தைஇய வெறியயர் களனும் (திருமுருகு 10) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானேயாடுதலும் சிறுபான்மை புறத்திற்கும் உரித்தெனக் கொள்வர் நச்சினார்க்கினியர்.

"குறிஞ்சித் திணையில் தன் களவை மறைத்துத் தனிமையாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட

சை. சி. சா. வ. 16