பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


{

குருடை அடுக்கம்” (நற். 359)

எனவும்,

“சூருடைச் சிலம்பு” (நற். 373)

எனவும் குறிக்கப்பெற்றுள்ளன. அங்கு மனமாகாத இளைய மகளிர் தனிமையிற் சென்றபோது அவர் மனத்தே ஏற்பட்ட அச்சத்தின் விளைவாக அன்னோர் மெலிந்து வருந்துத லியல்பு. அச்சத்தால் ஏற்பட்ட மெலிவினை அம்மலைத் தெய்வமாகிய முருகனால் ஏற்பட்டதாகக் கொண்டு அம்மெலிவுதிர முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துதல் மலைவாணரது ஒழுகலாறு ஆயிற்று,

நெடுவேளால் அணங்குறும் இளமகளிரைப் போல அவனது ஊர்தியாகிய மயிலும் அம்முதல்வனால் ஆவேசிக்கப்பெற்று நடுங்குதல் உண்டு.

“குருறு மஞ்ஞையின் நடுங்க”

எனவரும் குறிஞ்சிப்பாட்டடி இங்கு நினைக்கத் தக்கதாகும்

“சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே' (52)

என்பது குறுந்தொகை. முருகனால் ஆவேசிக்கப்பெற்ற கணிகாரிகை வேலனைப் போன்று வெறியாடல் நிகழ்த்துதல் உண்டென்பது,

“முருகு மெய்ப்பட்ட புலத்திபோல

தாவுபு தெறிக்கும் மான்' (புறம். 259)

எனவரும் புறப்பாடல் அடிகளாற் புலனாகும்.

மன்னுயிர்களின் அச்சம் அகற்றி அருள் சுரக்கும் முருகப் பெருமானை வழிபடும் திறத்தில் மலைவாணர் அன்பு நீங்கா அச்சமுடன் தூய்மையுடையராய் ஒழுகினர் என்பது,

"அணங்குடை முருகன் கோட்டத்துக்

கலந்தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே”