பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

245


எனவரும் புறப்பாடற் பகுதியால் புலனாகும்.

ஒளிதங்கிய சிவந்த திருமேனியையுடைய முருகப் பெருமானுக்குப் பிணிமுகம் என்னும் பெயருடைய யானையும் மயிலும் ஊர்தியாகவும் கொடியாகவும் அமைந்தன வென்பது,

“மணிமயிலுயரிய மாறா வென்றி

பிணிமுக ஆர்தி ஒண்செய்யோனும்’ (புறம் 53:7-8)

எனவருந் தொடராற் புலனாம்.

முருகப் பெருமானைப் பிரியாத நிலையில் பேரொளியுடன் திகழும் தேவியாகக் குறமகளாகிய வள்ளி நாச்சியார் போற்றப் பெற்றுள்ளார். மனங்கமழ் தெய்வத்து இளநலமாகிய இத் தெய்வப் பொலிவினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,

“முருகு புணர்ந்தியன்ற வள்ளி போலநின்

உருவு கண்னெறிப்பநோக்கலாற்றலனே'

எனவரும் நற்றினைப் பகுதியாகும்.

மலைவாணர் தம் நிலத்து விளைவு பெருக மழை பொழியவும், போதிய அளவு பெய்தபின் விளைவு கெடாதவாறு மழை நீங்கவும் முருகப் பெருமானை வேண்டி வழிபடுவர் என்பதும், முருகன் அருளால் விளைந்த தினையினை உவகையுடன் பகுத்துண்டு மகிழ்வர் என்பதும்,

&Ꮛ - o - w

மலைவான் கொள்கென உயர்பலி து:உய்

மாரியான்று மழை மேக் குயர்கென கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர் சாரற்

புனத்தினை அயிலும் நாட” (புறம். 143)

எனவரும் கபிலர் பாடலான் நன்குனரப்படும்.

குறவர்கள் மகப்பேறு கருதி முருகப் பெருமானை