பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வழிபடுவர். இச்செய்தி,

“குன்றக் குறவன் கடவுட்பேணி

இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்” (ஐங், 257)

என வரும் பாடலால் இனிது விளங்கும். மணமாகாத இளமகளிர் தம் திருமணம் இனிது நிறைவேறுதல் வேண்டி முருகப் பெருமானை நறுமலர்கள் தூவி வழிபடுதல் உண்டு. இச்செய்தி,

"குன்றக் குறவன் காதன் மடமகள்

மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி தேம்பலிச் செய்த ஈர்நறுங்கையள் (ஐங். 259)

எனவரும் தொடர்களால் இனிது விளங்கும். இங்ங்னம் தலைவியின் திருமணம் இனிது நிறைவேற தோழி முதலியோர் முருகப் பெருமானை வழிபட்டுக் குரவைக் கூத்தாடி அம்முதல்வனது பெரும் புகழைப் பாடிப் பரவுதலு முண்டு. இச் செய்தி,

“தெரியிழாய் நீயும் நின்கேளும் புணர வரையுறை தெயவம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆட குரவையுள் கொண்டு நிலைபாடிக்காண்” (கலி. 39)

எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். மலைவாழ்நர் வரையுறை தெய்வமாகிய முருகக் கடவுளைப் பேணித் தாம் வித்திய தினை நன்கு விளைதல் வேண்டுமெனப் போற்றி வழிபடுதலுண்டு. இச் செய்தி

“பலிபெறு கடவுட்பேணிக் கலி சிறந்து

நுடங்குநிலைப் பறவை உடங்குபீள் கவரும் தோடிடங் கோடாய்க் கிளர்ந்து நீடினை விளைமோ வாழிய திதையே (நற். 251)

எனவரும் தொடர்களால் புலனாகும். பாண்டிய நாட்டில்