பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

247


வாழ்ந்த மலைவாழ்நராகிய குறவர்கள் முருகப் பெருமானைட் போற்றித் தாம் வளர்த்த சந்தன மரத்தைத் தன் நாட்டு மன்னனாகிய பாண்டியனுக்கு அன்பின் கையுறையாகத் தந்தனர். இச் செய்தி

'தன் கடற்பிறந்த முத்தின் ஆரமும்

முனைதிரை கொடுக்கும் துப்பின் தன்மலைத் திறலருமரபின் கடவுட் பேணி குறவர் தந்த சந்தின் ஆரமும் இருபேராரமும் எழில் பெற வணியும் திருவீழ் மார்பின் தென்னவன்” (அகம். 13)

எனவரும் அகப்பாடற் பகுதியால் இனிது விளங்கும். ஒத்தவன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் துண்டுதலால் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுக் கூடும் இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் மலையுறை தெய்வமாகிய முருகப் பெருமானை வாழ்த்தி வணங்கித் தலைமகளை நோக்கி நின்னிற் பிரியேன் எனத் தண்ணீரைப் பருகிச் சூளுறவு செய்தல் உண்டு. இச்செய்தி

{ %

S S S S S S S S S S S S S S S S S S S பறங்குமலை

மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது ஏமுறுவஞ்சினம் வாய்மையிற்றேற்றி அந்தீந்தெண்ணீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி (குறிஞ்சிப்.)

எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளாற் புலனாகும்.

குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகப் பெருமான் யானையை ஊர்தியாகக் கொண்டு பகைவரை அழிக்கும் வேற்படையாலே கடல் நடுவே புக்கு இருவேறு உருவின னாகிய சூரபதுமனையும் அவன் வடிவாகிய மாமரத்தையும் பிளந்து அழித்தருளியதும் குருகொடு பெயர் பெற்ற குன்றமாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்தருளியதும் ஆகிய புராணச் செய்திகள் சங்கச் செய்யுட்களிற் பலவிடங்களிலும் எடுத்தாளப் பெற்றுள்ளன.