பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


多。

ෆි

"வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி அணங்குடையவுனரேமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறார்ந் தாங்கு (பதிற். 11)

எனவரும் பதிற்றுப்பத்தில் கடல் அவுனர்களால் சூழப்பெற்ற சூரபதுமனையும் அவனுக்குக் காவலாக இருந்த மா மரத்தையும் முருகப் பெருமான் வேற்படையால் பிளந்தழித்த செய்தி உவமையாக எடுத்தாளப் பெற்றது. 'சூருடைமுதல்’ என்றது சூரவன்மா தனக்கு அரணாகவுடைய மாவின்முதல் என்றவாறு, இனிச் சூரவன்மா தான் ஒர்மாவாய் நின்றான் என்று புராணம் உண்டாயின், சூரனாதற்றன்மையையுடைய மாவின்முதல் என்றவாறாம்’ என்பர் பழைய உரையாசிரியர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பகைவரது காவல் மரத்தினைத் தடிந்து யானைமேல் உலாவந்த தோற்றத்திற்கு முருகப் பெருமான் கடல் நடுவே நின்ற சூர்மாவைத் தடிந்து களிற்றின் மேல் எழுந்தருளிய தெய்வத் தோற்றத்தினைக் குமட்டுர்க் கண்ணனார் உவமையாக எடுத்தாண்ட திறம் முருகன் சூர்மாவைக் கொன்ற புராண வரலாற்றின் தொன்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

மிகப் பழங்காலத்திலே மக்களினத்தார் தமக்கு இடர் விளைத்த விலங்குகளையும், பகைவர்களையும் அழித்தற் பொருட்டுப் பயன்படுத்திய படைக்கல வகைகளுள் தொன்மையுடையதும் ஆழ்ந்து அகன்று நுண்ணிதாகிய திறத்தால் அறிவின் ஒட்பத்தைப் புலப்படுத்துவதும் வேல் என்னும் படைக்கலமேயாகும். இத்தகைய வேற்படையைத் தாங்கிய இளைய வீரனாகவும், மக்களுக்கு உளதாம் பல்வகை அச்சங்களைப் போக்கி அவர்கள் நினைந்தவற்றை விரைந்து முடித்தருளும் இளைய வீரர் தலைவனாகவும், செஞ்ஞாயிற்றை ஒத்த சிவந்த திருமேனியனாய் நறுமலர் மாலையணிந்து நீல மயிலாகிய பறவைமேல் அமர்ந்து வரும் பேரழகனாகவும் மலைவாழ்நரால் வழிபடப் பெற்ற தெய்வம்