பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

249


சேயோனாகிய முருகப் பெருமான் என்பதனைச் சங்கச் செய்யுட்களால் நன்கு உணரலாம். எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவன் காண்டற்கரிய கடவுளாயினும் தன்னை அன்பினாற் கருதி வழிபடுவர் உள்ளத்தே மேற்குறித்தவண்ணம் கவின்பெறு தோற்றத்தின னாகத் தோன்றிப் புறத்தேயும் காட்சி நல்குவான் என்பது அம்முதல்வனதருளால் அவனைப் போற்றிப் பேரின்பம் நுகர்ந்த அருளாளர்களும் அம்முதல்வனை அன்பினால் ஒருங்கு கூடிப் போற்றும் திறத்தார் அவன் அருளுக்கு இலக்காகிய உலகத்து ஏனைய் மக்களும் முறையே சிறப்பு நிலையிலும், பொது நிலையிலும் கண்டுனர்ந்த அனுபவ உண்மையாகும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் உறும் பெருமக்கள்,

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’

என்ற நன்னோக்கு உடையராய்ப் பெரும் பெயர் முருகனாகிய முழுமுதற் கடவுளாற் பெறும் பேரின்ப நிலையினைப் பெறுதற்கு உறுதுணையாக முருகனது பொருள் சேர் புகழ்த் திறத்தைப் பலரும் ஒருங்கு கூடிப் போற்றும் முறையில் இயற்றியருளிய தெய்வப் பனுவல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவது பத்துப்பாட்டுள் முதற் பாட்டாகிய திருமுருகாற்றுப்படையாகும்.

தன்னிகரற்ற தலைவன் ஒருவன்பால் பரிசில் பெற்று வரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலிய பரிசில் வாழ்நர் வழியிடையே தம்மை எதிர்ப்பட்ட இரவலர்களது துயரைக் கண்டு இரங்கித் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை அவர்களும் பெற்று மகிழும்படி வழிப்படுத்துதல் ஆற்றுப்படை எனப்படும்.

"கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇ சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்’