பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

251


எனவரும் தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் புலப்படுத்தியுள்ளார். இத்தொடர்ப்பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் இங்கு எடுத்து ஒதப்பட்ட கூத்தர், பானர், பொருநர், விறலியர் என்னும் இவர்களையேயன்றி, இவர்களைப் போன்று ஏனைக் கலைத் துறைகளில் பயிற்சி உடைய கலைஞர் பிறரும் தம் எதிர்ப்பட்ட மக்களைத் தத்தம் துறையில் மேல்மேல் வளம் பெறச் செய்தல் வேண்டும் என்னும் அருள் நோக்குடன் நல்வழியிற் செலுத்துதற்குரியர் என்பதும், இவ்வாறு வெவ்வேறு கலைத் துறைகளில் வல்ல சான்றோர் பலரும் தத்தம் பயிற்சி நிலையையும், வாழ்க்கை அனுபவத்தையும் எடுத்துரைத்துத் தம்மை ஒத்த மக்களை நல்வழியிற் செலுத்துதலாகிய பல்வேறு முயற்சிகளும் ஆற்றுப்படை என்னும் இத்துறையில் அடங்கும் என்பதும் இனிது புலனாகும். எனவே இங்கு எடுத்துக் கூறப்பட்ட கூத்தர், பானர், விறலியர், பொருநர் என்போர் கூற்றாக அமைந்த ஆற்றுப்படைகளேயன்றிப் புலவர் முதலிய பிறர் கூறுவனவாகவமைந்த ஏனைய ஆற்றுப்படைகளும் மேற் குறித்த தொல்காப்பிய இலக்கணத்தின்படி ஆற்றுப் பட்ைகள் எனவே வழங்குதற்கு உரியன. ஆற்றுப்படை எல்லாவற்றிற்கும் உரியவாக இங்குக் கூறப்பட்ட பொது இலக்கணத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் பத்துப்பாட்டுள் முதற்பாட்டாகத் திகழும் திருமுருகாற்றுப்படை என்ற பனுவல் தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்னும் உண்மை நன்கு தெளியப்படும். "ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி, பெற்ற பெருவளம் பெறார்க்கறிவுறீஇச், சென்று பயனெய்தச் கொன்ன பக்கம்” என வரும் தொல்காப்பியத் தொடர் எல்லாவகையான ஆற்றுப்படைகளுக்கும் பொது இலக்கணமாக அமைந்தது. எனவே கொள்ளுதல் வேண்டும். இத் தொடர்க்கு "இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியில் நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டும் திரிந்து பெறாதார்க்கு இன்ன இ. த்தே சென்றாற் பெறலாம் என்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று அக்கந்தழியினைச் சொன்ன கூறுபாடு” எனப் பொருள் வரைந்து தெய்வத்தி