பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விடத்து ஆற்றுப்படுத்துவதாகிய ஆற்றுப்படைக்குரிய சிறப்பிலக்கணமாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இவ்வாறன்றி இத் தொடரை ஆற்றுப்படையின் பொது விலக்கணமாகவே கொள்ளினும் தெய்வத்தின் பால் உய்ப்ப தாகிய இத்திருமுருகாற்றுப்படை அப்பொது விலக்கணத் தின்படி அமைந்த ஆற்றுப்படைகளுள் ஒன்றாய் அடங்குதல் காணலாம்.

"இனி முருகாற்றுப்படை என்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஒர் இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது என்பது பொருளாகக் கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர். இதனைப் புலவராற்றுப்படை என வழங்குதலுமுண்டு.

'அமரர்கண் முடியும் அறுவகையானும்’ எனவரும் தொல்காப்பியத் தொடர்க்கு “அமரர் கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பன வற்றினும்” எனப் பொருள் வரைந்த இளம்பூரணர் வந்தது கொண்டு வாராததுணர்த்தல்” (தொல், மரபு. 110). என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வரும் எனவும் கொள்க. முருகாற்றுப் படையுள்,

”மாடமலிமறுகில் கூடல் குடவயின்

இருஞ்சேற்றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட்டாமரைத்துஞ்சி'

என்றவழி ஒருமுகத்தால் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க எனவரும் இளம்பூரணர் உரை, திருமுருகாற்றுப்படை புலவராற்றுப்படை என்ற பெயரால் இளம்பூரணர் காலத்தில் வழங்கியது என்பதனை வலியுறுத்தும். கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என ஏனைய ஆற்றுப்படைகளெல்லாம் ஆற்றுப்படுத்துவோராகிய கூத்தர் முதலியோரது தலைமை தோன்ற அவர்களது பெயரால் வழங்குமாறு போல, முருகன்பால் முதுவாய் இரவலனாகிய புலவனை புலமைச் செல்வருள் ஒருவர் ஆற்றுப்படுத்தும்