பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


காரணமாக மன்னுயிர்த் தொகுதியாகிய நம்மை நோக்கி எளிவந்து தோன்றி அருள்புரியும் வண்ணம் அவ்விறைவனை அன்பின் திறத்தால் நம்வழிப்படுத்தும் வழிபாட்டு முறை களை அறிவுறுத்தும் முறையில் இப்பாடல் அமைந்தமைபற்றி இது முருகாற்றுப்படை என்னும் பெயர்த்தாயிற்று என்பதும் பண்டைச் சான்றோர் முடிபாகும். இந்நுட்பம்

ફ્રક

S S S S S S S S S S S CS S S S S S S S CC S S S S S CCC C S குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர்”

எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடரானும்,

§§

களநன் கிழைத்துக் கண்ணிசூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (அகம்.)

எனவரும் அகப்பாடலாலும் நன்கு புலனாதல் காணலாம். முருகாற்றுப்படுத்த எனவரும் இத் தொடர்க்குப் “பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின” என்று நச்சினார்க்கினியர் கூறிய பொருள் முருகாற்றுப்படை என்னும் பெயர்க் காரணத்தை இனிது புலப்படுத்துவதாகும்.

இனி, முருகன் எழுந்தருளிய திருப்பதிகளாகிய திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் ஆறுபடை வீடுகளையும் பற்றிக் கூறுதலின், இப்பாடல் திருமுருகாற்றுப்படை என்னும் பெயர்த்தாயிற்று எனக் கொண்டு இவ்வொரு பாடலையே ஆறுபகுதிகளாகப் பகுத்து வழங்குவாரும் உளர். இத்திருமுருகாற்றுப்படையில் தனிப்பட எடுத்துரைத்துச் சிறப்பிக்கப்பட்ட திருப்பதிகள் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் என்னும் நான்குமேயாகும். அந்நூல் ஐந்தாவதாகக் கூறும் குன்றுதோறாடல் என்பது ஒருதனித் திருப்பதி அன்று. சேயோனாகிய முருகப் பெருமான் குறிஞ்சி நிலத் தெய்வம். ஆதலால் அவ்விறைவனுக்கு எல்லா மலை