பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உரைத் தொடரால் நன்கு துணியப்படும். பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையினைப் பாடிய நக்கீரனாரே பத்துப்பாட்டுள் ஏழாவதாகிய நெடுநல்வாடை என்னும் படலையும் பாடியுள்ளார். இச்செய்தி, "பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை" எனவரும் நச்சினார்க் கினியர் உரைத் தொடரால் நன்கு புலனாகும்.

இனி, திருமுருகாற்றுப்படையிலும் நெடுநல் வாடையிலும் முறையே பேரின்பமாகிய வீடுபேற்றினையும் சிற்றின்பமாகிய உலகியல் வாழ்வினையும் நாடி வாழ்ந்த இரு வேறு மனநிலை புலப்படுதலாலும் இவ்விரு பாடல் களிடையே மொழி நடை முதலியன வேறுபட்டிருத்த லானும் இவை இரண்டும் ஒரு புலவரால் பாடப்பெற்றிருத்தல் இயலாது என்றும், நெடுநல்வாட்ை இயற்றிய நக்கீரனார், கடைச் சங்க காலத்திலும், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாம் என்றும் அறிஞர் ஒருவர் எழுதியுள்ளார் (திருமுருகாற்றுப்படை உரையாசிரியர் உரையுடன் கூடியது. முன்னுரை மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்ப் பிரசுரம் 68 பார்க்க). அவர்தம் கருத்து பண்டைச் சான்றோர் உரையொடு முரண்படுதலின் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. உலகத்து வாழ்வாங்கு வாழும்உயர்ந்த ஒழுகலாறு உடைய பெரும்புலவரது வாழ்க்கையிலே நெறிமுறைபிறழா உலகியற் செயல்களும், வீடுபேற்றிற்குக் காரணமாகிய மெய்ந்நெறிச் செயல்களும் வடிகால் முறையே ஒருங்கு நிகழ்தல் இயல்பு. அம்முறைப்படி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த தெய்வப் புலவராகிய நக்கீரனார் உலகியல் வாழ்வில் நின்ற நிலையிலேயே எங்கும் நிறைந்த பெரும் பொருளாகிய பெரும் பெயர் முருகனை உணர்ந்து பேரின்பம் எய்தும் வழிபாட்டு முறைகளை விளக்கியுள்ளார். உலகியல் நெறியில் வள்ளல்களை நாடிச் செல்லும் பரிசிலர் வாழ்க்கையைப் பற்றியும், யோக நுகர்ச்சியாகிய இல்வாழ்க்கை யைப் பற்றியும் இழித்துக் கூறும் குறிப்பெதுவும் திருமுரு காற்றுப்படையில் இடம்பெறவில்லை. பத்துப்பாட்டுள் முதலாவதாகவுள்ள திருமுருகாற்றுப்படையும் ஏழாவதாக