பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல்” (அகம் 50)

என மதுரை மருதன் இளநாகனாரும்

“உருவச் நெந்தினை குருதியொடு தூஉய்

முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (அகம். 22)

என வெறிபாடிய காமக் கண்ணியாரும் கூறும் தொடர்கள் திருமுருகாற்றுப்படையில்

“சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுே வல்”

எனவும்,

'உருவப்பல்பூத்துஉய் வெருவர குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரனினர் உட்க முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர்”

எனவும் வரும் தொடர்களோடு ஒத்து நிற்றலைக் கூர்ந்து நோக்குங்கால், இப்புலவர்கள் அனைவரும் கடைச் சங்க காலமாகிய ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது நன்கு புலனாகும். ஆகவே மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாாே இத்திருமுருகாற்றுப்படையைப் பாடியவர் என்றும், இவரே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நெடுநல்வாடையைப் பாடியவர் என்றும் பண்டையோர் கூறும் கூற்று உறுதிப் படுதல் காண்க. திருமுருகாற்றுப்படை பாடிய ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனச் சுட்டப்படுதலால் இவர் வாழ்ந்த ஊர் மதுரை என்பதும், இவருடைய தந்தையார் மதுரையில் மானாக்கர்கட்குக் கல்விபயிற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தமையால் மதுரைக் கணக்காயனார் என வழங்கப் பெற்றார் என்பதும் நன்கு LρωςβτΓΓιδ.

பெரும்பெயர்க் கடவுளாகிய முருகப் பெருமான் திருவருளால் ஐம்புலநெறியின் நீங்கிச் செம்புலச் செல்வராய் மதுரையில் வாழ்ந்த நக்கீரனார் என்னும் புலவர் பெருமான்