பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

265


நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு”

எனவரும் இத்திருமுருகாற்றுப்படையின் வரிகளை அடி யொற்றி அமைந்தனவாகும்.

'அமரர் கண் முடியும் அறுவகையானும்”

என்ற தொகுப்பில் முதற் கண்னவாகிய கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என இந்நூற்பாவிற் கூறப்பட்ட இலக்கணத்தை இம்மூன்றுடன் சேர்த்தெண்ணப்பட்ட புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்னும் ஏனை மூன்றற்கும் சேர்த்துப் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்திவருமெனவும் கொள்க’ என்றார் இளம்பூரணர். அவர் கருத்துப்படிப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை என்பது புலவராற்றுப் படையாகும். முருகப் பெருமான்பால் முதுவாயிரவலனாகிய புலவனை ஆற்றுப்படுத்தும் புலவராற்றுப்படையாகிய திருமுருகாற்றுப்படையுள் மாடமலிமறுகின் கூடலாகிய மதுரையின் மேற்கே அகன்ற வயலிடத்தே மலர்ந்த தாமரை மலரின் கண்ணே இரவெல்லாம் இனிது துயில் கொண்ட வண்டினம், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேன் மனம் கமழும் நெய்தல் மலரிலே இசை முரன்று ஞாயிறு தோன்றிய காலைப் பொழுதிலே திருப்பரங்குன்றத்தினை யடைந்து அங்குள்ள சுனையின்கண்ணே கண்போல் மலர்ந்த விரும்பத்தக்க மலரிடத்தே பரவி ஒலிக்கும் என்னும் இக்கருப்பொருள் நிகழ்ச்சியில், மாடமலி மறுகின் கூடலம்பதியிலே வளமார்ந்த அரண்மனையிடத்தே இரவுப் பொழுதிலே இன்துயில் வதிந்த பாண்டியன், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேங்கமழும் நறுமலர்ப் பொய்கையிலே நீராடி, ஞாயிறு தோன்றும் காலைப் பொழுதிலே திருப்பரங்குன்றத்தினையடைந்து முருகப் பெருமானுடைய திருவருள் நோக்கிற்குரியவனாகி அம்முதல்வனைப் பரவிப் போற்றும் வழிபாட்டு நிகழ்ச்சியினை,

“மாடமலிமறுகிற் கூடற் குடவயின்