பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

269


'பெண்பாலுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாலியோ கெய்தி விடுவர்காண் சாழலோ

என்பதனான் உணர்க” என விளக்கமும் தந்துள்ளார். இவ்விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமானுடன் பிரிவின்றியியைந்த அருட்சத்தியே வள்ளியம்மை யென்பது அவர் கருத்தாதல் நன்கு புலனாம். மேற்குறித்த ஆறுதிருமுகங்களும் தத் தமக்குரிய தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துதலால் அவ் வாறு திருமுகங்களுக்கும் பொருந்த இரண்டிரண்டாகவமைந்த திருக்கரங்களின் பொதுவியல்பையும் சிறப்பியல்புகளையும் பிரித்துரைக்கும் முறையிலமைந்தது திருமுருகாற்றுப்படையில் 102ஆம் அடிமுதல் 118ஆம் அடிவரை யமைந்த பகுதியாகும். பொன்னாற் செய்த ஆரந்தாங்கிய அழகிய பெருமை வாய்ந்த மார்பிற் கிடந்த சிவந்த மூன்று வரியினையும் தன்னிடத்தே வந்து பொருந்தும்படி அமைந்து வண்மையினாலேயே பெரும்புகழ் நிறையப் பெற்றுச் சுடரையுடைய படைக் கலங்களை எறிந்து பகைவர் மார்பைப் பிளந்தவை முருகப் பெருமானுடைய திருக்கைகளாகும். அக்கைகளில் ஒருகை விண்ணிடத்தே செல்லும் முனிவர்களுக்குப் பாதுகாவலாக ஏந்தியகைக்கு இணைந்தகை மருங்கிலே வைத்தது என்பார்,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை

உக்கம் சேர்த்தியது ஒருகை”

என்றார். கதிரவனது வெம்மை பல்லுயிர்களும் பொறுத்துத் தாங்க வொண்ணாதது எனக் கருதித் தமது பெருங் கருனையால் அக்கதிரவனொடு திரிந்து கதிரவனது வெம்மையைத் தமது சடைக்கற்றையால் பொறுக்கின்ற முனிவர்கள்,

'விண்செலல் மரபின் ஐயர்”

எனப் பெற்றனர். உலக நலங்கருதிக் கதிரவனொடு சுழன்று திரியும் இம்முனிவர்களைக் காத்தற் பொருட்டு முருகன் ஏந்தியகை உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. எனவே