பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இக்கை மாயிருள் ஞாலம் மருவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்த முகத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்ததாயிற்று.

இங்கு முருகப் பெருமானால் காக்கப்பெற்ற விண்செலல் மரபின் ஐயர் எனப்படுவார்,

"நிலமிசை வாழ்நர் அலமரல் தீர

பெறுகதிக் கனலி வெம்மைதாங்கி காலுணவாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவர்” (புறம், 43)

எனப் புறநானூற்றிற் குறிக்கப் பெற்றனர்.

முருகனது மனனும் முகனும் கையும் ஒரு தொழிலைச் செய்தலின் அதனொடு இனைந்த மற்றொருகை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது” என்றார் நச்சினார்க்கினியர். உக்கம் : மருங்கு = இடை. முருகப் பெருமானுக்குரிய ஒருகை அங்குசத்தைச் செலுத்தாநிற்க, அதற்கிணையான மற்றைக்கை செந்நிறம் வாய்ந்த ஆடையை யணிந்த தொடையின் மேலே கிடந்தது என்றார்.

“நலம் பெறுகலிங்கத்துக் குறங்கின் மிசையசைஇய

தொருகை

அங்குசங்கடாவ வொருகை”

என்றார். இத்தோற்றம் யானையின் மேற் செல்வார்க்கு உரியதாகும். முருகப் பெருமான் தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யானைமேல் வந்து அருள் செய்தல் இயல்பு ஆகலின் இக்கைகள் காதலின் உவந்து வரங் கொடுத்த முகத்திற்கு ஏற்றனவாயின. இரண்டுகைகள் வியப்பையும் கருமையையும் உடைய கேடகத்துடனே வேலையும் வலமாகச் சுழற்றின வென்பார்.

“இருகை ஐயிருவட்டமொடு எஃகுவலந்திரிப்பு”

என்றார். இதனானே அசுரர் வந்து வேள்வியைக் கெடாமல்

ខេត្តា ஒட்டுதற்கு இவற்றைச் சுழற்றுதலின் வேள்வி ஒர்க்கும் முகத்திற்கு இக்கைகள் ஏற்றனவாயின.