பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

19



காண்டற்கு அரிய கடவுளை உயிர்களின் அகத்தும் உலகின் புறத்தும் ஒளியுருவில் வைத்து வணங்கும் வழிபாடு நம் நாட்டில் பன்னூறாண்டுகளாக நிலவி வருகின்றது. உலகின் புறத்தே ஒளிப்பிழம்பாகத் திகழும் ஞாயிற்றை இறைவன் திருமேனிகளுள் ஒன்றாகக் கொண்டு வழிபடும் வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். எல்லாம் வல்ல சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு, ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் எண்பொருள்களையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டு திகழ்தலின் அம்முதல்வனுக்கு அட்டமூர்த்தி யென்னும் பெயர் வழங்குவதாயிற்று.

'அட்டமூர்த்தி அழகன்”

'நிலம் நீர் நெருப்புயிர் நீள் விசும்பு நிலாப்பகலோன்

புலனாய அமைந்தனோ டெண்வகையாய்ப்புணர்ந்து

நின்றான்”

எனவரும் திருமுறைத் தொடர்கள் இறைவன் எண்பேருருவினனாகத் திகழுந் திறத்தினை நன்கு விளக்குவனவாகும். சிவபெருமானுக்குரிய எண்பேருருவங்களில் எல்லாருங்கான முதன்மை பெற்று உலகு விளங்கவிரொளியுடையதாய்த் திகழ்வது ஞாயிறொன்றேயாதலின் கதிரவன் வழிபாடு கற்றோர் கல்லாதார் ஆகிய எல்லா மக்களாலும் சிறப்பாக மேற்கொள்ளப் பெறுவதாயிற்று. இது குறித்தே பகலவன் வணக்கத்தின் மேலதான காயத்திரி மந்திரமாகிய இதனையே வேதியர் பலரும் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் ஒதிச் சிறப்பாக வழிபாடு செய்யக் காண்கிறோம். காயத்திரி மந்திரத்திற் பர்க்கன் என்ற பெயராற் போற்றப் பெறுவோன் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானேயென்பது மைத்திராயனியோப நிடதத்திலும் வடமொழி அமரநிகண்டிலும் தெளிவுறுத்தப் பெற்றுள்ளது. இந்நுட்பம்,

“அருக்கள் பாதம் வணங்குவரந்தியில்

அருக்கனாவா னரணுரு வல்லனோ

இருக்கு நான்மறை யீசனை யேதொழும்

25. திருநாவுக்கரசர், தேவாரம்.

26. மாணிக்கவாசகர், திருவாசகம்.