பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

271


முருகப் பெருமான் முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறிச் சொல்லிறந்த மெய்ப் பொருளை உணர்த்தும் காலத்து ஒரு கை மார்புடன் விளங்க, மற்றொருகை மார்பின் மாலை தாழ்ந்ததனோடு சேர்ந்து அழகு பெற விளங்கியது என்பார்.

$%

ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய"

என்றார் . என்றது முருகன் மோனமுத்திரைக் கையனாய் தானேயாய் இருந்து மெய்ப்பொருளைச் சுட்டிக் காட்டக் குவிந்தவாயமையாத குடத்தில் நீர் நிறைந்தாற்போல இன்ப மயமான பேரொளி மானாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய மோனமுத்திரை இங்கு கூறப்பெற்றது. இக்கைகள் இரண்டும் எஞ்சிய பொருள்களை விளக்கும் முகத்திற்கு ஏற்றனவாயின. முருகப் பெருமானது ஒருகை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்ப அதனொடு இணையாய்க் கீழே தாழ்ந்த மற்றைக்கை இனிய ஓசையை யுடைய மணியை மாறி ஒலிக்கச் செய்கின்றது என்பார்

"ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை

பாடின் படுமணியிரட்ட”

என்றார். இக்கைகள் களவேள்வி வேட்கின்ற முகத்திற்கு ஏற்பவமைந்தன. முருகப் பெருமானுடைய ஒருகை நீல நிறத்தையுடைய மேகத்தாலே மிக்க மழையைப் பெய்யுமாறு செய்விக்க அதற்கினையான மற்றைக்கை தெய்வமகளிர்க்கு மனமாலையைச் சூட்டும் நிலையிலமைந்த தென்பார்.

“ஒருகை நீல்நிறவிசும்பின் மலிதுளிபொழிய ஒருகை

வானற மகளிர்க்கு வதுவை குட்ட”

என்றார். “வள்ளியொடு நகையமர்ந்த முகம் உலகிற்கு இல்வாழ்க்கையை நிகழ்த்துவித்தது ஆதலின் அவ்வில் வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த்துதற்பொருட்டு மனமாலை யைச் சூட்டிற்று” என்பதாம். திருஆவிநன்குடியில் முருகப் பெருமானை அன்பினால் வழிபடும் பெருந்தவச் செல்வர்களின் உள்ளத்தியல்பினையும் திரு வேடப்