பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

273


غer

மூவரும் தத்தமக்குரிய தொழில்களை நிகழ்த்தித் தலைவராக வேண்டி அயனைப் பழைய நிலையிலே நிறுத்தல் கருதி கருடக் கொடியையுடைய திருமாலும், திரிபுரம் எரித்த சிவபெருமானும், இந்திரனும் ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என நான்கு கூறாகப் பகுக்கப்படும் தேவர்கள் முப்பத்து மூவரும் பதினெண்கணங்களும் வான்வழியாகத் திருவாவினன்குடிக்கு வந்து தன்னைக் கண்டு போற்றும் வண்ணம் தாவில் கொள்கை மடந்தையாகிய தெய்வ யானையுடன் முருகன் எழுந்தருளியிருக்கும் செய்தி திருமுருகாற்றுப்படையில் திருவாவினன்குடிப் பகுதியில் விரிவாக எடுத்துரைக்கப்பெற்றது. இப்பகுதி சங்ககாலத்து நிலவிய பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் ஒருங்கே சுட்டும் முறையில் அமைந்துள்ளது. உலகினைப் படைத்துக் காத்து அழிக்கும் அயன் அரி அரன் என்னும் இம்மூவரும் தத்தம் உருவினாலும், தொழிலினாலும் வேறுபட்டவராயினும் உலகில் மன்னுயிரனைத்தையும் ஒப்பக் காத்தலாகிய ஒரே கோட்பாட்டினை உடையராதலின் அம்மூவரும் ஒருவரே எனப் போற்றத்தகும் பெற்றியர் என்பது,

“உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்

பலர் புகழ் மூவரும்”

எனவரும் தொடரால் வலியுறுத்தப் பெற்றுள்ளமை காண்க. நகர்தோறும் நாற்றிசைக்கும் உரிய காவல் தெய்வங்களாக இந்திரன், இயமன், வருணன், சோமன் (குபேரன்) என்போர் வழிபடப் பெற்றனர் என்பது நாற்பெருந் தெய்வத்து நன்னகர் என்ற தொடர்க்கு நான்காகிய பெரிய தெய்வத்தை உடைய நன்றாகிய ஊர்கள் எனவும், நாற்பெருந் தெய்வமாவன இந்திரன், யமன், வருணன், சோமன் என்றும் தெய்வங்கள் எனவும் நச்சினார்க்கினியர் தரும் உரை விளக்கத்தால் புலனாகும்.

“ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெlஇயர்"

என்றது பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்ற பதினெண் கணங்களை. பதினெண் கணங்களாவார் தேவர்,

്. ♔, 7r. ഖ, 18