பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முருகனுக்குரிய கோழிக் கொடியை நிறுத்தி ஊர்தோறும் செய்யும் திருவிழாக்களிலும் அன்புடைய அடியார்கள் இறைவனது பொருள் சேர் புகழ்த்திறங்களை ஏத்துதலாலே அம்முதல்வன் மனம் பொருந்தி அவர்கட்கு எளிவந்தருளும் இடத்திலும், முருகபூசை செய்யும் வேலன் அமைத்த வெறியாடுகளத்திலும், காட்டினிடத்தும் பொழிலினும், ஆற்றிடைக் குறையினும், ஆறுகளிலும் குளங்களிலும், பலவாகிய ஊர்களிலும் நாற்சந்தியிலும், முச்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் புதிய பூக்களையுடை கடம்ப மரத்திலும் ஊர் நடுவாய் எல்லாரும் தங்கும் மரத்தடியிலும், அம்பலத்திலும் தெய்வம் உறையும் தூண் நிலைபெற்ற இடத்திலும் தலைமையினையுடைய கோழிக் கொடியோடு நகரை அணி செய்து நெய்யோடே வெண்சிறு கடுகையும் அப்பி வழிபடுதற்குரிய மந்திரத்தைப் புறத்தார்க்குப் புலனாகாமல் மென்மையாக உச்சரித்து வழிபட்டு அழகிய மென் மலர்களைத் தூவி உள்ளொன்றும் புறம்பொன்றுமாக இரண்டு உடைகளை உடுத்துச் சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டி வெள்ளிய பொறிகளைத் தூவிக் கொழுவிய ஆட்டுக் கடாயினது உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியைச் சிறு பலியாக இட்டுப் பல பிரப்பும் வைத்துப் பசுமஞ்சளோடே சந்தனம் முதலியவற்றையும் தெளித்துச் செவ்வலரிமாலையையும் ஏனைய நறுமலர் மாலையையும் ஒத்த அளவினவாக அறுத்து அசையும்படி மேலே கட்டி மலைப்பக்கத்து ஊர்களில் வாழ்வார்க்குப் பசியும் பிணியும் பகையும் நீங்குக என வாழ்த்தி நறும்புகை காட்டிக் குறிஞ்சிப் பண்ணைப் பாடி முழங்குகின்ற ஒசையினையுடைய மலையருவியோடு இனிய பலவாத்தியங்களும் ஒலியாநிற்க செந்நிறமுடைய பூக்களைத் து விக் குருதிகலந்த தினையினையும் பரப்பிக் குறச்சாதியிற் பிறந்த பெண் முருகப் பெருமான் உவக்கும் வாத்தியங்களை வாசிக்கப்பண்ணி, தெய்வம் இல்லை என்பார் அஞ்சும்படியாக இளைய பிள்ளையார் அவ்விடத்தே எழுந்தருளும்படி அம் முதல்வனை அன்பர்களின் வழிப்படுத்தின பெரிய நகரின் 52ణా வெறியாடுகின்ற களம் ஆரவாரிப்ப, அதற்கு ஏற்ற புகழ்ப்பாடல்களைப்பாடி ஊது கொம்புகள் பலவற்றையும் சேரவூதி, கொடிய மணியையும் ஒலிப்பித்து முருகப்