பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

279


பெருமானுக்குரிய ஊர்தியாகிய பிணிமுகம் என்னும் பட்டத்து யானையை வாழ்த்தித் தமக்கு ஏற்ற வரங்களை இரந்து வேண்டிநிற்பாரும் முன் வேண்டியவண்னம் வரங்களைப் பெற்றவர்களும் ஆகிய இருதிறத்தாரும் வழிபட்டுப் போற்ற அவ்வவ்விடங்களிலே உறைதலும் உரியன். முற்கூறிய அவ்விடங்களிலே ஆயினுமாக! பிறவிடங்களிலே ஆயினுமாக! (முருகனை நீ கானப் பெறுவாய்). அழகு விளங்க முருகப் பெருமானை முற்பட நீ கண்டபொழுது முகம் விரும்பித் துதித்து இருகைகளையும் தலைமேல் வைத்து வாழ்த்திப் பின்னர் அம் முதல்வன் திருவடி நின் தலையிலே பொருந்தும்படி நிலத்தில் வீழ்ந்து வணங்கி நெடிய பெரிய இமயமலையின் உச்சியில் தருப்பை வளர்ந்த பசிய சுனையிடத்தே ஐம்பெரும் பூதங்களுக்குத் தெய்வமாகிய சதாசிவன், மயேச்சுரன், உருத்திரன், அரி, அயன் என்னும் ஐவருள் உருத்திரனைத் தெய்வமாகவுடைய தீ தான் அகங்கையிலே ஏற்ப, அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்திய செல்வனே! கல்லா லின் கீழிருந்த கடவுளின் மகனே! மலைமகளாராகிய உமா தேவிக்கு மகனே! பகைமையுடையார்க்குக் கூற்றுவனே! கொற்றவை யின் புதல்வனே! காடுகிழாளாகிய காளியின் மைந்தனே! தேவர்கள் போற்றும் படைத்தலைவனே! இன்பத்திற்குரிய மாலையை யணிந்த மார்பனே! எல்லா நூல்களையும் அறியும் புலவனே! போர்த் தொழிலில் ஒப்பற்றவனாகி நிற்பாய்! பொருகின்ற வெற்றியையுடைய இளையோனே! அந்தனருடைய செல்வமாய் இருப்பவனே! சான்றோர் புகழ்ந்து கூறும் சொற்களின் தொகுதியாய் விளங்குபவனே! வள்ளி நாச்சியாரும் தெய்வயானையாரும் ஆகிய மகளிருக்குக் கணவனே! வேல் பொருந்திய பெரிய கையினை உடையவனே! குருகாற் பெயர் பெற்ற (கிரெளஞ்சமலை) மலையைப் பிளந்த குன்றாத வெற்றிச் செல்வனே! வானைத் தீண்டும் நீண்ட சிமயங்களை உடைய குறிஞ்சி நிலத்திற் குரியவனே! பலரும் புகழ்ந்து போற்றும் நன்றாகிய நூல்களை உனர்ந்த ஞானியர்க்கு ஏறுபோல்வாய். உயிர்கள் தம் முயற்சியால் சென்று பெறுதற்கரிய முறைமையினையுடைய பெரும் பொருளாகிய வீட்டினை வழங்க வல்ல முருகப் பெருமானே! அப்பெரும்பொருளை நச்சி வந்தார்க்கு வீடு