பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



கருத்தினைநினை யார்கன் மனவரே'

எனத் திருநாவுக்கரசர் அருளிய திருப்பாடலால் இனிது புலனாதல் காணலாம்.

இருக்கு வேதத்திலுள்ள பதிகங்கள் யாவும் ஆரிய மாந்தராலேயே இயற்றப்பெற்றன அல்ல. இந்திரன் வருணன் முதலான தம் படைத் தலைவர்களின் ஆவிகளின் மேல்ஆரியர் பாடிக் கொணர்ந்த பழம் பாடல்களோடு அவர்களை நன்னெறிப்படுத்தல் வேண்டி இங்குள்ள திராவிட முனிவர்கள் பாடிச் சேர்த்த பதிகங்களும் இருக்கு வேதத்தில் உள்ளன என்பதும், காயத்திரி மந்திரத்தை இயற்றி அதனை இருக்கு வேதத்திற் சேர்த்து அவ்வேதத்திற்கு உயிர்த்தன்மையும் உயர்வுங் கொடுத்தவர் விசுவாமித்திரர் என்னும் பரதகுல அரச முனிவரேயென்பதும் பொது நிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகளார் முதலிய அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து கண்ட உண்மைகளாகும்."

வாழ்க்கைக்கு நலந்தரும் ஒளியும் வெம்மையும் வழங்கும் தீயினைத் தோற்றுவிக்க எண்ணிய பண்டைக்கால மக்கள், மரக்கட்டைகள் இரண்டினைக் கொண்டு ஒன்றோடொன்று உரசித் தேய்த்து நெருப்பினை உண்டாக்கி அதனாற் பச்சையுணவுப் பண்டங்களைப் பதமாக்கிச் சமைத்துண்ணவும் அதனொளியால் இருள் செறிந்த இராப் பொழுதில் நச்சுயிர்கட்கும் கொலை விலங்குகட்கும் அஞ்சாது விலகியொழுகவும் தெரிந்துகொண்டார்கள். அத்தகைய நெருப்பின் ஒளிப்பிழம்பினையே தமக்கு அண்மையில் வளர்த்து மனக்களிப்புடன் வணங்கத் தலைப்பட்டனர். பெரிய மரத்தின் நிழலில் வட்டமாகக் குழியினைத் தோண்டி அதன்கண் தீயினை வளர்த்து அதற்கு நெற்பொரியும் மலரும் தூவி வழிபட்டனர். நாட் செல்லச்செல்ல அத்தீயினைத் தொடுதற்கும் நீராட்டி வழிபடுதற்கும் ஏற்ப அத்தீச்சுடரையொத்து நீண்டு குவிந்ததோர் சுடருருவினைக் கருங்கல்லில் அமைத்து வேள்விக்

27. திருநாவுக்கரசர், தேவாரம். 5. 100. 8.

28. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 141.