பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

281


வரவை முன்பே அறிவேன். அது நினக்கு எய்தலரிதென்று அஞ்சுதலை நீக்குவாயாக என்று நின்மேல் அன்பினைப் புலப்படுத்துவதாகிய மொழிகளைப் பலமுறையும் அருளிச் செய்து இருண்ட நிறத்தையுடைய கடல்சூழ்ந்த உலகத்தில் நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி விழுமியதாய்ப் பிறரால் பெறுதற்கரியதாகிய வீடுபேற்றினை நல்கியருள்வான்” என முதுவாய் இரவலனை நோக்கிச் செம்புலச் செல்வராகிய நக்கீரர் முருகப் பெருமான்பால் ஆற்றுப்படுத்துகின்றார். எல்லாம் வல்ல இறைவன் உலகியல் கல்வி அறிவாலும் உயிர் உணர்வாலும் உணர்தற்கரியவன் என்பதும், அம்முதல்வனது திருவருள் ஞானத்தாலேயே மன்னுயிர்கள் அவனை உணர்ந்து உய்தி பெறுதல் கூடும் என்பதும்,

“பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடு உள்ளத்தே நாடி” எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தத்தாலே அறிவுறுத்தப்பெற்றன. தனக்குவமையில்லாத இறைவனை மன்னுயிர்கள் தம் அறிவினால் அறிதல் இயலாது எனவும் அவனருளாலே தான் அவனை உணர்ந்து வழிபட்டு உய்தி பெறுதல் கூடும் எனவும் இறைவனது இயல்பு குறித்துச் சைவ சித்தாந்த மெய்ந்நூல்களிற் கூறப்படும் இவ்வுண்மை,

“நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கருமையின்

நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு

o - - . 33 புரையுநர் இல்லாப் புலமை யோய்

எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரில் தெளிவாக இடம் பெற்றுள்ளமை காணலாம்.

தீயோரைச் சினந்து பொருது அழிக்கும் திறத்தில் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவனாக முருகப் பெருமான் விளங்குதலால் பெருவீரரது சீற்றத்திற்கு முருகப் பெருமானது சீற்றத்தை உவமையாகக் கூறுதல் மரபாம் என்பது, "............................ வெனவேல

உருவப்பஃறேர் இளையோன் சிறுவன் முருகற் சீற்றத்து உருகெழு குருசில்'