பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் பொருநராற்றுப்படைத் தொடரால் புலனாம். வென்ற வேலினையும், அழகினையும் உடையனாய்ட் பல தேரினை உடைய இளஞ்சேட் சென்னியின்மைந்தன் முருகனது சீற்றத்தையுடைய உட்குதல் பொருந்திய தலைவன் (கரிகாலன்) என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (புறம்.16)

என இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போற்றப்படுதலும்

“முருகன் நற்போர் நெடுவேளாவி’ (அகம்.1)

எனவும், முருகுறழப்பகைத் தலைச் சென்று (மதுரைக். 181) எனவும் போர்த்திறத்திற்கு முருகனது போர்த்திறம் உவமையாகக் கூறப்படுதலும் இங்கு நோக்கத்தக்கன. ஒய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டானாக, அம் முதல்வன் கேணியில் பூ வொன்றினைத் தன் வேலாகத் தோற்றுவித்து, நல்லியக் கோடன் கனவிற் றோன்றிக் கேணியிற் பூத்துள்ள பூவை வாங்கிப் பகைவரை வென்றடக்குக என அருள் செய்தான் எனவும், அது கொண்டு நல்லியக் கோடன் தன் பகையை வென்று அடக்கினான் எனவும், முருகனது வேல் கேணியிற் பூவாகத் தோன்றினமையால் அவ்வூர் வேலூர் எனப் பெயர் பெற்றதெனவும் ஒரு கதையினைச் சிறுபாணாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். இக்கதைக் குறிப்பினையுடையதாக அமைந்தது,

“திறல்வேல்நுதியில் பூத்த கேணி

விறல்வேல் வென்றி வேலூர்” (சிறு. 170-171)

எனவரும் சிறுபாணாற்றுப்படைத் தொடரால் “முருகன் கையில் வலியினையுடைத்தாகிய வேலின் நுதிபோல கேணி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியை யுடைய வேலும்” என்பது இத் தொடரின் பொருளாகும் என்றது . நல்லியக் கோடன் தன் பகை மிகுதிக் கஞ்சி முருகனை வழிபட்டவழி, அவன் இக்கேணியிற் பூவை