பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


துணங்கையஞ்செல்வி’ (பெரும்பாண். 457-458)

எனவரும் பொரும்பானாற்றுப்படைத் தொடரிலும் இடம் பெற்றுள்ளமை அறியத் தக்கதாகும். தெய்வத் தன்மையைக் குறித்து வழங்கும் முருகு என்னும் சொல் முழுமுதல் கடவுளாகிய முருகனைக் குறிப்பதோடு, முருகற்ற்ேறத்து உருகெழு வீரர்களைக் குறித்துச் செய்யப்படும் கள வேள்வியைக் குறித்த பெயராகவும் ஆளப் பெறுதல் உண்டென்பது,

“படையோர்க்கு முருகயா" (மதுரை, 33)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடரால் அறியலாகும் முருகப் பெருமான் கோயில் கொண்டருளிய திருத்தலங்களுள் முதன்மை பெற்றுத் திகழ்வது மதுரையின் மேற்கே உள்ள திருப்பரங்குன்றம் ஆகும். இக்குன்றத்திலே இனிய ஒசையினையுடைய ஒலிகளை உடைய மேகம் தங்கி மழையைப் பொழிதலும், அம்மலையிலே ஆடவரும் மகளிரும் பெருந்திரளாகக் கூடி முருகப் பெருமானுக்குத் திருவிழாக் கொண்டாடும் முறையில் ஆடல்பாடல் ஆகியவற்றை நிகழ்த்துதலின் ஆரவாரம் வானளாவ ஓங்கியிசைத்தலும்

ફર્દ

தளிமழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயன் ததைந்த கோதை தாரொடு பொலிய புணர்ந்துடன் ஆடும் இசையே அனைத்தும் அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்ப”

(மதுரைக். 262-267)

எனவரும் மதுரைக் காஞ்சியடிகளாற் புலனாம்.

ஒளி வாய்ந்த பூக்களையுடைய கொன்றையின் பரந்த நிழலிடத்தே நீலமணியை ஒத்த பசிய பயிர்களினிடத்தே முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே வெள்ளியின் நிறம் வாய்ந்த முல்லைப் பூக்கள் உதிர்ந் துபரந்து தெளிந்த நீரையுடைத்தாகிய பள்ளத்திலே நீலமணியென