பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

285


மருளும் நெய்தல் பூக்கள் மலரக் காட்டினால் சூழப்பட்டு விளங்கும் நிலப்பகுதி ஓவியம் வல்லானால் அணிசெய்யப் பட்ட வெறியாடுகளத்தை ஒத்துத் தோன்றியது என்பது மதுரைக் காஞ்சி 277 முதல் 285 முடியவுள்ள வடிகளால் விரித்துரைக்கப்பெற்றுள்ளது. இதனால் முருகனைக் குறித்த வழிபாட்டு நிலையாகிய வெறியாடல் நறுமணங்கமழும் பலவகைப் பூக்களால் அணி செய்யப் பெற்ற இடத்திலேயே நிகழும் என்பது புலனாகும்.

இளைய பிள்ளையாராகிய முருகப் பெருமானுக்குரிய வேலைத் தாங்கிய வேலனாகிய முருக பூசை பண்ணுபவன் மனமாகாத இளமகளிர்களுக்கு உண்டாகிய மெலிவுக்குரிய காரணத்தைக் கழங்கு வைத்துப் பார்த்து இவ்வருத்தம் முருகனால் வந்ததெனக் கூறித் தான் கூறிய சொல்லாலே கேட்டோர் உள்ளத்தைப் பிணித்துச் சல்லி, கரடி முதலிய வாச்சியங்கள் ஒலியாநிற்கக் கார்ப்பருவத்தில் மலர்ந்த குறிஞ்சி மலரைச் சூடிக் கடப்பமலர் மாலையை யணிந்த அழகியோனாகிய முருகனைத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி (ஆவேசிக்கும்படிச் செய்து) வழிபாடு செய்வன். அந் நிலையில் மன்றங்கள்தோறும் மகளிர்பலரும் தம்முள் கைகோத்துநின்று முருகனது புகழ் பாடிக் குரவைக் கூத்தாடுவர். இச்செய்தி,

“அருங்கடி வேலன் முருகொடுவளைஇ

அரிக்கூட்டி இன்னியங் கறங்க நேர் நிறுத்து கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணித்தழுஉப்பினையூஉ மன்றுதொறும் நின்ற குரவை’ (மதுரைக் 610-615)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடரில் விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாட்காலையில் அரசர்க்குரிய கடன்களைச் செய்து முடித்து தெய்வ வழிபாட்டோடு இருந்த தோற்றப் பொலிவினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,