பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

287


குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமான் தனக்குப் பூசை பண்ணும் வேலன் முதலியோர்பால் ஆவேசித்தல் போலத் தன் ஊர்தி எனப்படும் மயிலின்மேலும் ஆவேசித்தலுண்டு. இச்செய்தி,

“குருறு மஞ்ஞையின் நடுங்க” (குறிஞ்சிப் 169)

எனவரும் குறிஞ்சிப்பாட்டடியான் புலனாகும். "தெய்வம் ஏறின மயில் போலே நடுங்காநிற்ப” என்பதிதன் பொருளாகும். முருகனால் வருந்தலுற்ற மகளிரது வருத்தந் திர வெறியாடு களத்தில் முருகனுக்குரிய தெய்வமரமாகிய கடம்ப மரத்தினடியிலே சூழவும் மலர் மாலைகள் அணி செய்யப் பெற்றிருக்கும் என்பது, -

"....................... நெடுவேள்

அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய

துணையறை மாலையின்...............

(குறிஞ்சிப் 174-177)

எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளான் புலனாகும்.

காவிரிப்பூம்பட்டினத்தில் கட்டப்பெற்றுள்ள பல்வேறு கொடிகளுள் நெடுநிலை மாடத்து வாழும் இளமகளிர் காந்தட்பூப்போலும் இருகைகளையும் குவித்து வணங்கி முருகவேளைக் குறித்து வெறியாடல் நிகழ்த்தும் மகளிரொடு பொருந்திக் குழலும் யாழும் முதலிய இன்னியம் இயம்பத் திருவிழா நீங்காத அகன்ற வீதியிலே தீமையை யகற்றும் சிறப்பினையுடைய தெய்வத்தை வழிபட்டுத் துவிய மலர் நிறைந்த கோயில் வாயிலிலே பலருந்தொழக் கட்டிய கொடிகள் நிழல் செய்யும் திறத்தினை,

“காந்தளந் துடுப்பிற் கமழ்குலை யன்ன

செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்

குழலகவ யாழ்முரல

முழவதிர முரசியம்ப