பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சேவலங்கொடியோன் காப்ப

לל - چه : دبs g * ஏமவைகல் எய்தின்றால் உலகே

எனவரும் பெருந்தேவனார் பாடல் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தாக வமைந்துள்ளது. செந்தாமரை மலர் போலும் அழகிய சிவந்த திருவடியினையும், பவழம் போன்ற சிவந்த நிறத்தையுடைய திருமேனியையும், அம்மேனியில் விளங்காநின்ற ஒளியினையும், குன்றும்ணியின் நிறம்போலும் செந்நிறம் வாய்ந்த உடையினையும், குருகுபெயர்க் குன்றத்தின் நடுவிடம் பிளக்கும்படி எறிந்த அழகிதாய்ச் சுடர்விட்டு விளங்கும் நெடிய வேற்படையினையும், கோழிச் சேவற் கொடியினையும் உடைய முருகப் பெருமான் பாதுகாத்தருளுதலால் இவ்வுலகத்து மன்னுயிர்கள் இன்பம் நிறைந்த நாட்களைப் பெற்று வாழ்கின்றன என்பது இப்பாடலின் பொருளாகும்.

குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானது திருவடியையும், ஒளி திகழும் திருமேனியையும், அம் மேனியில் அணியப் பெற்ற செந்நிறம் வாய்ந்த உடை யினையும், அம்முதல்வன் ஏந்திய நெடிய வேற்படை யினையும், கோழிக் கொடியினையும் உவமை காட்டிப் புனைந்துரைக்கும் முகமாகக் கர்ண்டற்கரிய அக் கடவுளை வழிபடும் அன்பர்கள் கண்ணினாற் காணச் சொல்லோவியம் செய்து காட்டும் முறையில் அமைந்த இச்செய்யுளிற் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்கள் என்னும் சைவ சித்தாந்தத் தத்துவவுண்மை நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்து நோக்கற்பால்தாகும். போர்க்களம் குருதியாற் செந்நிறக் களமாக ஆகும்படி அவுனர்களைக் கொன்று இல்லை யாக்கிய நடுவுநிலையில் திறம்பாத செம்மைவாய்ந்த திரண்ட கைப்பிடியினையுடைய அம்பினையும் குருதியாற் சிவந்த கொம்பினையுடைய யானையையும், கழல வணிந்த வீரவளையையும் உடைய முருகனுக்குரிய மலை, குருதி போலும் செந்நிறப் பூங்கொத்துக்களையுடைய காந்தளை யுடையது என்று கூறித் தோழி தலைவன் தந்த கையுறையை மறுத்தல் என்னும் துறையில் அமைந்தது,