பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

21


குண்டத்தைக் குறிக்கும் முறையில் வட்டவடிவில் அமைக்கப்பட்ட கருங்கற்பீடத்தில் சுடருருவாகிய அக்குழவியினை நிலைபெறச் செய்து நீராட்டி மலர்துவி உணவுபடைத்து வழிபட்டனர் எனவும் அத்திருவுருவே சிவலிங்கம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று எனவும் கருதுவர் மறைமலையடிகளார்."

வேள்விக்குண்டத்தில் தீயினை வளர்த்து வேதமந்திரங்கள் கூறித் திக்கடவுள் மூலமாக இந்திரன் முதலிய தேவர்கட்கு ஆடு முதலிய உயிர்களை வேள்விற் பலியிட்டு வனங்கும் தீ வழிபாடு ஆரிய வினத்தார்க்குரியதொன்றாகும். இவ்வழிபாட்டில் தீயே தெய்வமாகப் போற்றப் பெறுகின்றது. வேதமந்திரங்களால் வேள்வி செய்வோர் வேள்விக் குண்டத்தில் வளர்த்த தீயினையே தெய்வமாகக் கொண்டு போற்றுதல் சிறப்புடைய வழிபாடன்று எனவும், தூய தீயினையே தனது திருமேனிகளுள் ஒன்றாகக் கொண்டு மன்னுயிர்களுக்கு அருள்புரியும் தெய்வமாவான் அட்ட மூர்த்தியாகிய சிவபரம்பொருளே யாதலின் வேள்விக் குண்டத்தில் வளர்க்கப்பெறும் தீ இறைவன் திருமேனிகளுள் ஒன்றெனக் கொண்டு வழிபடுதலே பொருத்தமுடையது எனவும் இவ்வுண்மையுணராது செய்யப்படும் வேதவேள்விச் சடங்குகள் பயனற்றன எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது.

எரிபெ ருக்குவரவ்வெரி யீசன

துருவ ருக்கம தாவ துணர்கிலார்

அரிய யற்கரி யானை யயர்த்துபோய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே"

எனவரும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை யாகும்.

சிவலிங்க வழிபாடு வேதகாலத்திற்கு முற்பட்ட தென்றும் சிந்து மக்களிடையே பரவியிருந்ததென்றும் 'வைணவ சைவ சமயங்களின் ஆராய்ச்சி நூல்

29. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 142

30. திருநாவுக்கரசர், தேவாரம். 5. 100. 7