பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

291


“செங்களம் படக்கொன்றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட்டியானைக் கழறொடிச்சேஎங்குன்றம் குருதிப்பூவின் குலைக்காந் தட்டே” (குறுந்- 1)

என்னும் குறுந்தொகைப் பாடலாகும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகப் பெருமானுக்கு உரிய ஊர்திகளுள் பிணிமுகம் என்னும் பெயருடைய யானையும் ஒன்றென்பதும் முருகப் பெருமான் அவுனர்களைப் பொருதழிக்கும் காலத்து யானைமீதமர்ந்து அம்பெய்து பொருதலுமுண்டென்பதும்,

"கடுஞ்சின விறல்வேள் களிறுர்ந்தாங்கு” (பதிற்.1)

எனவும்,

"சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம குழக்கி’ (பரி, 5)

எனவும் வரும் தொடர்களால் அறியப்படும்.

தலைவியின் மெலிவு முருகனால் வந்ததெனக் கருதி வெறியாடத் தொடங்கிய நிலையில் அவ்வெறியினை விலக்கித் தோழி அறத்தொடு நிற்பதாக அமைந்தது,

“முருகயர்ந்து வந்த முதுவாய் வேல்

சினவ லோம்புமதி வினவுவதுடையேன்

LమGమి றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவணறுநுத னி.வி

வணங்கினை கொடுத்தியாயி னணங்கிய விண்டோய்மாமலைச் சிலம்பன் உண்டா ரகலமு முண்ணுமோ பலியே” (குறுந் 362)

எனவரும் பாடலாகும்.

“முருகப் பெருமானை வழிபட்டு வெறியாடல் நிகழ்த்தவந்த அறிவு வாய்ந்தவேலனே. யான் நின்னைக் குறித்து வினவுவதொன்றுடையேன். என்னைச் சினவா தொழிக. பலவாக வேறுபட்ட சிலவாகிய சோற்றையுடைய பலியுணவுடனே சிறிய மறியினைக் கொன்று இத்தலைவியது