பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நெற்றியைத் தடவி முருகப் பெருமானை வனங்கி பலி யுனவைப் படைப்பாயாயின், அவ்வுணவினை வானளாவிய பெரிய மலைப் பக்கத்தையுடைய தலைவனது ஒளி தங்கிய மாலையை யணிந்த மார்பும் நின்னாற் கொடுக்கப்பட்ட அப்பலியை உண்னுமோ?” என்பது இப்பாடலின் பொருளாகும். த.ைலவியின் நோய் தீர முருகனை வழிபட்டு நிகழ்த்தும் இவ்வெறியாடலில் பலவேறு உருவினவாகிய சோற்றினை உணவாகப் படைத்தலும், மறியைப் பலியிட்டு, நிலத்தில் படிந்த குருதித்துளியைத் தலைவியின் நெற்றியில் தடவுதலும் வெறியாடலில் நிகழ்த்தும் சடங்கென்பது மேற்குறித்த குறுந்தொகைப் பாடலாற் புலனாகும்.

தினைப்புனத்தில் தினை விளைவித்த குறவன் தன் தோட்டத்திலே முதன்முதல் புதிதாய் விளைந்த பெருங் கதிரைச் சிறப்புணவாகக் குறிஞ்சிக் கடவுளாகிய முருகனுக் குரியதென விட்டிருந்தான். அதனைத் தெய்வத்திற்கு விடப் பட்டதென அறியாது மயில் உண்டது. அந்நிலையில் அம் மயில் முருகபூசை பண்ணும் குறமகளாகிய தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல அஞ்சி நடுங்கியது. இச் செய்தியினை,

"புனவன்றுடவைப் பொன்போற் சிறுதினைக்

கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்” (குறுந்- 105)

எனவரும் குறுந்தொகைப் பாடலில் நக்கீரர் குறித்துள்ளார். மலைவாழ்நர் தினை முதலியன விளைக்குங்கால், முதலிற் றோன்றிய பெருங்கதிரைத் தெய்வத்திற்காக இட்டு வைத்தல் மரபென்பதும், அதனைத் தெய்வத்திற்குரிய படைப்புப் பொருளாகவே பயன்படுத்துதல் வேண்டுமென்பதும், அதனை யறியாதுண்போர் தெய்வத்தாலாவேசிக்கப்பெற்று நடுக்கமுறுவர் என்பதும் இப்பாடல:ற் புலனாம்.

இயலிசைத் iழ்ட் துல்ல பரிபாடல் என்னும் தொகை நூலில் தி கா , சவ்வேள், காடுகிழாள், வையை மது ைஎன்னும் பொருள் பற்றிய பாடல்கள் இடம்