பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

295


“வேலன் ஏத்தும் ఏమిటి?

அவை, வாயுமல்ல பொய்யு மில்ல நீயே வரம்பிற்றிவ்வுலகமாதலின் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை”

எனவரும் நான்கடிகள் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமானது சிறப்பிலக்கணம் ஒன்றினையே சிறந்து எடுத்துக் கூறும் முறையில் அமைந்துள்ளன. உலக முதல்வனாகிய முருகப் பெருமான், சூரபதுமன் முதலிய அவுனர்களை அழித்ததும், குருகொடு பெயர்பெற்ற மால்வரையைப்

- பிளந்ததும் முதலிய புரானச் செய்திகள் வேண்டுதல் வேண்டாமை இலானாகிய அம்முதல்வன் தன்னருளால் உலகுயிர்களைச் சார்ந்து புரந்தருளும் பல்வேறு நிலைகளைக் குறிப்பனவாதலின் அவை, அவனது பொதுவியல்பெனப் படுவனவன்றி, அவனது சிறப்பிலக்கணமாகக் கெர்ள்ளத் தக்கன அல்ல என்பதும், தனக்குவமை இல்லாத அவன் ஒருவனே உலகெலாம் இயக்கும் முழுமுதற் கடவுளாக அவனை யொழிந்த ஏனை மன்னுயிர்கள் யாவும் தாம் தாம் செய்யும் நல்வினைத் திறத்தால் உயர்வினைப் பெறுதலும், தீவினைகளால் இழிவினையடைதலும் அம்முதல்வனது திருவருளாகிய ஆனையின் வரம்பின் உட்பட்டு நிகழ்வன என்பதும் தன்னிற் பிரிவிலா யென்னுந் திருவருள் வலத்தால் உலகுயிர்கள் பலவகைச் செயல்களில் ஈடுபட்டு இயங்க, அவற்றுள் ஒன்றினும் தோய்வின்றி நிற்றலே.அம் முதல்வனது சிறப்பிலக்கண்ம் என்பதும் இவ்வடிகளிற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

நீயே வரம்பிற்றிவ் வுலகமாதலின், வேலன் ஏத்தும் வெறியாகிய அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல எனவும், அவற்றுள் ஒன்றாய வழி, சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை எனவும் வரும் இத்தொடர்கள், அம்முதல்வனது பொதுவும், சிறப்புமாகிய இயல்புகளைப் புலப்படுத்துவன. உலகப் பொருள்கள் ஒன்றிலும் தோய்வற நிற்கும் சிறப்பியல்பினனாகிய முருகப் பெருமான் படைத்தல் முதலிய தொழில்கள். எல்லாவற்றையும் தன் தொழிலாகக் கூடி நின்று செய்யும் நிலையிலும் தான் அத்தொழில் பற்றி விருப்பு