பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தெரிவிக்கின்றது. கற்காலப் பொருள்களில் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன என்பதால் வேதகாலத்திற்குமுற்பட்டது சிவலிங்க வழிபாடு என ஆர். ஜி. பந்தர்க்கரும் கருதுகின்றனர்.

மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடிய இப்பேரண்டத்தின் பெரும் பகுதியில் சிவலிங்க வழிபாடு சிறப்பாகப் பரவி இருந்திருக்கிறது. அது, எகிப்து, சிரியம், பாரசீகம், சிறிய ஆசியா, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகளில் நெடுங்காலமாகத் தழைத்தோங்கியிருந்தது. அமெரிக்க நாட்டை முதன்முதலில் ஸ்பெயின் நாட்டவர் கண்டுபிடித்தபோது, தெய்வவழிபாட்டிற்கு மிகத் தூய்மையானதாகவும் சமய நெறிக்கு மிக உயர்ந்ததாகவும் உள்ள பொருளாகச் சிவலிங்க வழிபாட்டினை அவர்கள் அங்கே கண்டனர். இதன் பண்பாடு மனித இனத்தை உயர்த்தக் கூடுமெனக் கருதத்தக்க கொள்கையுடனும் தத்துவத்துடனும் இணைந்துள்ளது என மேனாட்டுப் பேராசிரியராகிய வெஸ்ட்ரோப் என்னும் அறிஞர் சிறப்பித்துக் கூறியுள்ளார். பண்டைநாளில் உலக முழுவதும் பரவியிருந்த இச்சிவலிங்க வழிபாடு இப்பொழுது இந்திய நாட்டளவிலும் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் ஆங்காங்கே நிலைபெற்றுள்ளது.

தென்னாட்டில் குடிமல்லம், குடுமியான்மலை முதலிய இடங்களிலுள்ள சிவலிங்கங்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டினவை என்பர் ஆராய்ச்சியாளர். அசோகர் கி. மு. 249ஆம் ஆண்டில் தம்மகள் சாருமதி என்பவளுடன் நேபாளத்திற்குச் சென்றபோது அங்குப் பசுபதிநாதர் என்னும் சிவபெருமான் பெயரால் பாசுபதச் சைவமிடம் ஒன்று இருந்ததாகவும் சாருமதி அம்மடத்திற்சேர்ந்து துறவு நிலையை மேற்கொண்டதாகவும் வரலாறு கூறுகின்றது. நேபாளம் இக்காலத்திலும் சைவ சமயத்தைப் போற்றும் நாடாக விளங்குகின்றது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரையுள்ள இந்தியப் பெருநிலப்பரப்பினுள் பன்னிரண்டு சோதிலிங்கங்கள் இக்காலத்தும் இந்நாட்டு மக்களால் சிறப்பாக வழிபடப் பெற்றுவருதல், சிவலிங்க வழிபாடு நாடு முழுவதும் பரவியுள்ள திறத்தினையும் இந்திய