பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சடங்கென்பதும் இதனால் அன்னோர்க்குத் தெய்வத்தால் தீமை நேரும் என்பதும் அத்தீமை நீங்க இறைவனை வழிபடுதலே அவர்பால் அன்புட்ையார் செயல் என்பதும் ஆகிய உண்மைகள்.புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

தன் அடியார் பொருட்டுக் கூற்றினது மிக்க ஆணையையும் இகழும் ஆற்றல் முருகப் பெருமானுக்கு உண்டு என்பது.

‘எருமை இருந்தோட்டி எள்ளியும் காளை”

(பரி. 8; 86)

என்ற தொடரால் உணர்த்தப்பட்டது. மழையால் வளர்ந்த குளிர்ந்த கிளைகளையுடைய மரங்களடர்ந்த பகுதிகள் பறிக்கத் தொலையாவாக நிறைந்த மலர்களைப் பெற்று மலர, குளிர்ந்த பொய்கைகள் நீரால் நிறைய கூடல் நகரத்திற்கும் பரங்குன்றத்திற்கும் இடையேயமைந்த வழியின் கண்ணே திருவிழாத் தோற்றம் பொலியப்பரங்குன்றத்துப் பெருமானை வழிபட எழுந்து சாந்தமும், நறும்புகைக்குரியனவும், நந்தா விளக்கிற்கு வேண்டுவனவும், நறுமலர்களும், இசைக் கருவியாகிய முழவமும், மணியும் கயிறும், மயிலும், மழுப்படையும், ஊர்தியாகிய பிணிமுகமும் உட்பட முருகப் பெரும்ான் விரும்புகின்ற வேறுபல பொருள்களையும் ஏந்திக் கொண்டு பரங்குன்றத்தை அடைந்து தொழும் அடியார் களும், அம்மலையின் தாழ்வரையிற் சென்று முருகப் பெருமானின் திருவடிகளைத் தொழுது "யாம் எம். காதலரைக் கனவில் தொட்டது பொய்யாகாமல் நனவின்கண்ணும் அடைய வையைப் புதுப்புனலை அணி செய்க" என வரம் வேண்டுவோரும், வயிறு கருவுறுக’ என இறைவனுக்கு வேண்டும் பொருள்களை நேர்வோரும், “எம் கணவர் செய்பொருள் வாய்ப்பதாகுக” என முருகப் பெருமான் செவியிற்படக் குறை இரப்போரும் எம்முடைய கணவர் வியக்கத்தக்க போரில் பகைவரை அழித்து வெற்றி பெறுவாராக” என அருச்சிப்போருமாய் அம்மலையிற் குழுமிய நிலையில் பாடுவாரது பாணியாகிய தாளமும் ஆடுவாரது ஆடரங்கிற்குரிய தாளமும், மலையின் கண் உண்டாகும் எதிரொலியும் கலத்தலால் பெருமுழக்கம்