பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

305


முதல்வன் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் வள்ளி நாச்சியார்க்கு ஒத்தவாறும் உணர்த்துவது இப்பரிபாடலாகும். குறிஞ்சிக் கடவுளாகிய முருகனைப் பரவிட் போற்றும் நிலையிற் பாடிய இப்பாடலின் ஆசிரியர் குன்றம் பூதனார், நான்மறைப் பொருளை விரித்து அம்மறையது நல்லிசையை விளக்கும் வடமொழிப் புலவர்களை நோக்கித் தமிழியல் வழக்கமாகிய அன்பின் ஐந்தினைக் களவொழுக்கத்தின் சிறப்பினை விரித்துரைப்பதாகவமைந்தது,

"நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே யதுதான் இரத்தலு மீதலு மிவையுள் ளீடாப் பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல் தோள்புதிதுண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந்துவக்குஞ் சுணங்கறை யதுவே கோணங் குறமனைக் கிள்ந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே, அதனால் அகற லறியா வணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துணிக்குந் தவறிலரித் தள்ளப்பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன்” (பரி. 9, 12-26)

எனவரும் பகுதியாகும்.

நான்மறைப் பொருளை விரித்து அம்மறையின் நல்லிசையை விளக்கும் புலவர்களே! நான் கூறக்கருதிய நல்ல தொரு பொருளைக் கேண்மின். மக்கள் நுகரும் காம வின்பத்திற் சிறந்தது அன்புடைய காதலர் இருவர் தம்முட் கூடி நுகரும் இன்பமாகும். அஃதாவது, மெய்யுற்றறியாத ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவர் ஒத்த அன்பினராய் நல்லுழின் திறத்தால் தாமே மெய்யுற்றுப்புணரும் இயற்கைப் புணர்ச்சியாகும். இங்ங்ணம் ஒத்த அன்பில்லாத கற்புமணம் புலந்து ஊடுதலால் சிறப்பதாகும். புலத்தலாவது, தலைமகன் தலைவியின் பினக்கு நீக்குவார் வாயிலாக வேண்டிக்

சை. சி. சா. வ. 20