பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

307


துறையில் வெற்றிபெற்றுத் தாம் பெற்ற வெற்றிக் கறிகுறியாகத் தடாகம் போலும் சுனையின் பக்கத்தே வெற்றிக் கொடியை நாட்டப் பொலிவு பெற்று விளங்கிய திறத்தை விரித்துரைப்பது,

"கடுஞ்சூர் மாமுதறடிந்தறுத்தவேல்

அடும்போராளநின் குன்றின்மிசை ஆட னவின்றோரவர்போர் செறுப்பவும் பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் வல்லரை வல்லார் செறுப்பவும் அல்லர்ை யல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச்

செம்மைப் புதுப்புனற் றடாக மேற் தண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று” (பரி 9, 70-78)

எனவரும் பகுதியாகும். கடுந்தொழில் உடைய சூர்மாவைத் தடிந்தறுத்த வேலால் கொடியோரைக் கொன்று குவிக்கும் போர்த் தொழிலை யாள்பவனே! நீ வீற்றிருந்தருளும் பரங்குன்றின் மேலே ஆடல் பயின்றோரை ஆடலில் வல்லோர் வெற்றிகொள்ளவும் இசைபாடுதலில் வல்லாரை அத்துறையில் வல்ல பாணர் வென்றடக்கவும், வல்லுப் போரை வல்லாரை அத்தொழிலில் வல்லாற் வென்றடக்கவும் ஒழிந்த கலைத் திறங்களில் வல்லாரை அவ்வத்துறையில் வல்லார் வென்றடக்கவும் இக்கல்வி வென்றிகளால் ஒப்பில்லாத புகழ் பரப்பத் தடாகம் போலும் சுனையின் பக்கத்துக் கொடி எடுத்து நின்றது என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். தாவில் கொள்கைத் தந்தொழில் முடிப்பாருடைய மனத்தின் எழுந்தருளியிருந்து, அவர் தத்தம் தொழிலில் மேம்படுதற்கேற்ற உள்ளக்கிளர்ச்சியை நல்குவோன் முருகனாதலின் அம்முதல்வன் எழுந்தருளிய திருப்பரங்குன்றத்தில் இத்தகைய கலை வென்றிச் செயல்கள் நிகழ்வனவாயின என்பது இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியர் இருவரது அன்பின் வழிப்பட்ட ஊடல் உரிமையை விரும்பும் பண்பினையுடைய முருகப் பெருமானை நோக்கி அன்பினாற்