பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

309


நின்னை யாங்கள் விரும்பி அடுத்தடுத்து வழிபடுவதன் பயன் அவ்வழிபாடுகள் தாமே இன்னும் இன்னும் தின்புகழினும் பலவாக எங்கட்கும் பெருகுக என்பதேயாகும்" என முருகப் பெருமானை நோக்கித் தோழி பரவிப் போற்றுவதாக வமைந்தது,

“சூர்மருங்கறுத்த சுடர்ப்படை யோயே கறையில் கார்மழை பொங்கி யன்ன நறையி னறும்புகை நனியமர்ந்தோயே அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந்தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப்பாடும் பாட்டமர்ந்தோயே பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச் சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே இருபிறப்பிருபெயரீர நெஞ்சத் தொருபெயரந்தணரறன.மர்ந்தோயே அன்னை யாகலி னமர்ந்தியா நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன் பயம் இன்னு மின்னுமவையாகுக தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே”

(uຕື. 14, 18-32)

எனவரும் பகுதியாகும். முருகப் பெருமானை அடுத்தடுத்து வழிபடுவதன் பயன், அத்தகைய வழிபாடுகள் தமக்குத் தொடர்ந்தென்றும் கிடைத்தற் பொருட்டே எனத் தோழி கூறும் இவ்வேண்டுகோள்,

“கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”

என அருண்மொழித் தேவர் கூறும் அடியார் திருக் கூட்டத்தின் குறிக்கோளை நன்கு நினைவுபடுத்தல் காணலாம்.

திருப்பரங்குன்றத்துச் செவ்வேளைப் பரவிட்