பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


போற்றும் முறையில் நல்லழிசியார் பாடியது 17ஆம் பரிபாடலாகும். பரங்குன்றத்து முருகப் பெருமானை வழிபடும் அடியார்கள் சுற்றப்படும் சுடர்விளக்கும், இசைக்கருவிகளின் இன்னிசையும், சந்தனம் முதலிய மணப்பொருள்களும், அகிற்புகையும், கொடிகளும் ஒருங்கே வரத் தேன் நிறைந்த நறுமலர்களையும் தளிர்களையும், பூத்தொழில்களையுடைய ஆடைகளையும் தெளிந்த ஒசையினையுடைய மணியினையும் இலைத் தொழிலமைந்த வேற்படையினையும் சுமந்து வந்து சந்தனத்தைத் தெளித்து முருகபூசை செய்யும் வேலன் ஆட்டுக் கடாயைக் கட்டின பூசையையுடைய தெய்வமரமாகிய கடம்பமரத்தினைத் தோத்திரவுரைகளால் ஏத்தியவர்களாய் ஆளத்தியால் ஆக்கிய இசையினைப் பாடியவராய் விரிந்த மலர்களிலிருந்து சொரியும் தேனால் நனைந்த திருப்பரங்குன்றத்தின் தாழ்வரையிலே மாலை நேரந்தோறும் முருகப்பெருமானுக்கு நேரும் வழிபாட்டிலே கலந்து கொண்டு அம்மலையில் தங்கி முருகன் திருவருளில் திளைத்து மகிழும் வாய்ப்பினைப் பெற்ற மக்கள் இறைவன் கழலேத்தும் இன்பத்தையன்றி தேவருலகத்தே தங்கிய இன்பத்தைச் சிறிதும் விரும்ப மாட்டார்கள் என்பதனை,

"தேம்படுமலர்குழை பூந்துகில் வடிமணி

எந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரையசைத்த வேலன் கடிமரம் பரவின. ருரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலைமாலை யடியுறை இயைநர் மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர்”

(பரி. 17, 1-8)

எனவரும் தொடர்களில் நல்லழிசியார் குறித்துள்ளார்.

"தங்குபிறப்பே வீட்டினுக்கு மேலாந்தன்மை சாதித்தார்”

எனவரும் சேக்கிழார் வாய்மொழி இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும். திருப்பரங்குன்றத்தின் ஒரு பக்கத்தே இசைப்