பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்

படவுநின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ளவல்லாய்

ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே!”

எவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியாகும்.

திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானாகிய நீ மானிட மகளாகிய அழகிய வள்ளி நாச்சியாரைத் திருமணம் புரிந்த திறம் நின்னருகேயுள்ள வானுலக மடந்தையாகிய தெய்வயானையது திருமணத் துடன் மாறு கொள்வதுபோற் காணப்படினும் யாவரும் பெறவுறும் ஈசனாகிய நினது திருவருளின் நீர்மைக்குச் சிறிதும் மாறுபட்டதன்று என்பார்,

“தண்பரங்குன்றத்தியலணி நின் மருங்கு

சாறுகொள் துறக்கத் தவளொடு மாறுகொள்வது போலும் மயிற்கொடிவதுவை'

என முருகப் பெருமானை முன்னிலைப்படுத்துப் போற்றினார் நப்பண்ணனார். நின் மருங்கு சாறுகொள்துறக்கத் தவளொடு மயிற்கொடி வதுவை மாறுகொள்வது போலும் என இயையும். சாறு - விழா, திருமணம். துறக்கத்தவள்வானோர் தலைவன் இந்திரன் மகளாகிய தெய்வயானை யம்மையார். மயிற்கொடி - மயில்போலும் சாயலையும் கொடிபோல் நுடங்கும் இடையினையும் உடையாளாகிய வள்ளி நாச்சியார். சங்ககாலத்தில் வள்ளி நாச்சியார் தெய்வயாைைனயம்மையார் என்னும் தேவியர் இருவர்க்கும் நாயகனாக வைத்து முருகப் பெருமான் வழிபடப்பெற்றமை குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பரிபாடலாலும் நப்பண்ணனார் பாடிய இப்பத்தொன்பதாம் பரிபாடலாலும் நன்கு விளங்கும்.

அறிவினாலும் வீரத்தினாலும் பிறரைப் போர் வெல்லும் கூடல் நகரத்தின் கண்ணே மகளிரும் மைந்தரும் புணர்ச்சியொடு வந்த இரவுப் பொழுது நீங்கிய வைகறைப் பொழுதிலே இவ்வுலகத்து அறத்தை நிறையச் செய்து அதன்