பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பாண்டியனுடன் பரங்குன்றத்தை வலம் வரும் மக்கள் அம்மலையிலுள்ள குரங்குகள் உனனக்கூடிய பண்டங்களை அவற்றிற்குக் கொடுப்போரும் கரும்பினை முசுத்திரளுக்குக் கொடுப்போரும் தெய்வத்தன்மையினை யுடைய பிரம வீணையை வாசிப்போரும் கைவிரல்களை வேய்ங்குழலின் துளைகளின் வைத்து ஊதி இசையை அளப்போரும் யாழின்கண் இளி முதலிய சுரக்கோவை யையும் குரல் முதலிய சுரக் கோவையையும் வலியவும் மெலியவுமாகத் தாக்காது சமனாக வாசித்து அதன்கண் இசையின் இன்பத்தை நுகர்வோரும் அங்கு முருகப் பெருமானுக்கு நிகழும் பூசையின் அழகியல்பினைக் கூறி மகிழ்வோரும் யாழ் நரம்பின் குரல் கொம்மென ஒலித்த அள்விலே அதன் தாளத்திற்குப் பொருந்த முரசின் ஒலியை எழுப்புவோரும் ஆக மகிழ்ந்துறைவர் ஞாயிறு முதலாகவரும் கோட்களின் நிலைமையை அக் கோயிலில் வரையப் பட்டுள்ள சுடர்ச்சக்கரத்தால் ஆய்ந்தறிவோரும், தம்மைப் பிரியாமைக் குறிப்பினராகிய மகளிர் அங்கு எழுதப்பட்டுள்ள ஒவியத்தைக் கண்டு இவர் யார் என வினவ, அவள்தம் கணவர் 'இவள் இரதி, இவன் காமவேள்” எனக் கூறுவோரும் "இங்குள்ள பூனை இந்திரன், அவ்விடத்திலுள்ளவன் இரவில் வெளியே சென்ற கெளதமன், இவனது வெகுளியால் அகலிகையாகிய இவள் கல்லாகிய வரலாறு இது என்று கணவன்பால் தவறு செய்த மகளிரடைந்த தண்டனையைக் கூறுவோரும் இவ்வாறு சென்றவர் கையாற் சுட்டிக் கேட்கவும் உடன் வந்தவர் அவற்றை அறிவிக்கவும் இத்தன்மையவாய பல ஒவியங்கள் நிலைபெற்ற மண்டபங் களைச் செவ்விய மூங்கில்களையும் விரிந்த பாறைகளையு முடைய அகன்ற இடத்திற் கொண்டிருத்த லால் திருமால் மருகனாகிய செவ்வேள் எழுந்தருளிய திருக்கோயிலின் பக்கம் படிமுறையான் அமைந்த பல நிலைகளையுடையது.

பேதைப் பருவப் பெண்ணொருத்தி மலைவளம் கானும் விருப்பினால் உடன் வந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து அம்மலையில் வெளிப்பட்டு விளங்கும் கற்பாறை களின் இடையிடையே புகுந்து செல்பவள் தன் சுற்றத்தாரைக் காணாது சிறந்தவரே எனவும் சிறந்தவரோ எனவும்