பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

319


கூக்குரலிட்டு அவர்களை அழைத்தாளாக அவ்வழைப் பொலியினையேற்று அங்குள்ள குகைகள் அவ்வொலி யினையே எதிரொலிக்க அது கேட்டுச் சுற்றத்தார் தன்னை யழைப்பதாகக் கருதி அங்குச் செல்பவர் தன் சுற்றத்தாரைக் காணாது மீளுமிடத்தும் மீண்டும் மீண்டும் கூவுதலை யுடையளாய் நின்றாள். இவ்வாறு அன்பரது வாழ்த்தினை உவந்து ஏற்றுக்கொள்ளும் முருகப் பெருமானது திருப்பரங்குன்றின் இடவேறுபாடு இளஞ் சிறார்க்கு அறியாமை காரணமாக மயக்கஞ் செய்தலை யுடையதாகும்.

மிக விரும்பப்படும் சாய்ந்த நுணியினையுடைய கிளையினைப் போழ்ந்து புறப்பட்ட இளந்தளிர்களை விளையாட்டு விருப்பால் மகளிர் கொய்து இனிய சுனைக் கண்ணே உதிர்த்தனர். அத்தளிர்களுள் உதிர்க்கப்பட்ட சுனையின்கண்ணே துக்கிய தலையினையுடையனவாய் அலரையும் அரும்பினையும் பொருந்திக் கிடந்ததனை இஃது ஐந்தலையையுடைய பாம்பென்றும், அதனருகே முதிர்ந்த முகையைப் பொருந்திக் கிடந்ததனை அப்பாம்பின் மூத்தமைந்தனென்றும், இளமுகை யைப் பொருந்திக் கிடந்ததனை அப்பாம்பின் இளம்பார்ப் பென்றும் பிறழ வுணர்ந்து இளமகளிர் மருண்டு நின்றனர். அதனருகே பச்சிலையது இளங்கொழுந்து பிணியவிழ்ந்த வாயையுடைய அல்லி, கைபோற் பூத்த காந்தப்பூக்குலை கொறுக்கச்சியின் நறுந்தோட்டினையுடைய பூ, சுடர்போலும் துணர்களை யுடைய வேங்கைப்பூ நிறம் மிகுந்த தோன்றி (செங்காந்தட்) பூ, முதிரிந்த கொத்துக்களையுடைய நறவும்பூ, காலங் குறியாது பூக்கும் கோங்கு அக்கோங்கரும்போடு நிறத்தால் மாறுபட்ட மலரையுடைய இலவம் ஆகிய இம்மலர்க ளெல்லாம் பின்னிக் கட்டிய மாலைகள் போல மலர் நிறைந்தும் கோத்த மாலைகள் போல நிறம் வேறுபட்டும் தொடுத்த மாலைகள் போல இடையிட்டும் தூக்கிக் கட்டின மாலைகள்போல நெருங்கியும் பூத்தலால் மலையெங்கும்