பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அவ்வரை யுடைத்தோய் நீ, இவ்வரை மருங்கிற்

கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்

உடங்கமர் ஆயமோடேத்தினம் தொழுதே'

(பரி. 19:195-105)

என வரும் இப்பரிபாடலின் நிறைவுரையாகும். "அன்புடைமையாற் குறக்குடியிற் பெண்ணாகிய வள்ளியை மனந்தோய்! அருளுடைமையால் எம்முடைய வாழ்த்தினையும் நின் செவிக்குச் சிறப்புடைய உணவாகக் கேட்டல் வேண்டும். தின் உடையும் மாலையும் செம்மை நிறமுடையவாகப் பெற்றன. அவ்வாறே நினது வேற்படையும் (பகைவர் மார்பினைப் பிளத்தலால்) பவழக் கொடியின் நிறமாகிய செந்நிறத்தைக் கொள்வதாயிற்று. திருமேனி நிறத்தாலும் சுடர் விட்டெரிகின்ற தீயினை ஒப்பாய். நின் முகமும் விரிகதிர் வெப்பமடையாத இள ஞாயிற்றை ஒத்துள்ளாய். உலகிற்குத் துன்பஞ் செய்தலால் நீதியில் தவறிய சூரனாகிய மாலின் முதலைத் தடிந்து பகைமை பொருந்திய குருகு பெயர்க்குன்றத்துத் திருந்திய வேற் படையை யழுத்தி அம்மலையினைப் பிளந்தவனே திருப்பரங் குன்றமென்னும் இம்மலையினிடத்தே கடம்ப மரத்தின் நிழலிலே அமர்ந்தருளிய நினது நல்ல அருள் நிலையினை எம்முடன் பொருந்திய சுற்றத்தோடுங் கூடித் தொழுது வாழ்த்தினேம், எம்முடைய வாழ்த்து இது” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்தருளும் செவ்வேளைப் போற்றிப் பரவும் கடவுள் வாழ்த்தாக நல்லச்சுதனார் என்னும் புலவராற் பாடப்பெற்றது இருபத்தொன்றாம் பரிபாடலாகும். வென்றிக் கொடியினை யுடைய செல்வனே! நின்னால் ஊரப்பட்ட ஊர்தி சுடரினை யொத்தொளிரும் முகட்டாம் அணிந்த சென்னியையுடைய பிணிமுகம் என்னும் யானையாகும். நின் திருவடியில் தொட்டது. செந்தாமரையடிக்கு இயைந்த பீலிப் போழாற். புனைந்த அடையற் செருப்பாகும். நின் கையின் கண்னது நின்னை மதியாத அவுனர் தமக்குத் துணையாக மதித்த சூரனாகிய மாமரத்தினைத் தடிந்து குருகுபெயர்க்