பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

329


வளியும், மாகவிசும்போடு ஐந்து உட ன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக........................ உருகெழு பெரியோர்க்கு உயர்பலி தருமார் அந்திவிழாவில் துரியம் கறங்க” என்ற தொடரில் உள்ள கறங்க என்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம், சிறந்து புறங்காக்கும்’ எனப் பின்வரும் தொடரில் அமைந்த 'புறங்காக்கும்’ என்னும் பெயரெச்சத்தின் பகுதியாய்ப் புறங்காத்தல்’ என்னும் பிற வினைமுதல் விைைனகொண்டு முடியக் காக்கும்’ என்னும் அப்பெயரெச்சம் 'கடவுட்பள்ளி என்னும் பெயர்கொண்டு முடிந்தது, ஆகவே கடவுட் பள்ளி என்ற இத்தொடரிலுள்ள ‘கடவுள் என்றது முதற்குறித்த மழுவாள் நெடியோன் ஆகிய சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட தெய்வங் களையே குறித்தல் தெளிவு. இதற்குமாறாகப் புத்தரைக் குறித்ததென்று கொள்ளுதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும் இக்கடவுட் பள்ளியையடுத்துச் சிறந்த வேதம் விளங்கப்பாடும் அந்தனர்.பள்ளி கூறப்பட்டிருத்தலும் இங்குச் சிந்தித்தற்குரியதாகும். மாங்குடி மருதனார் காலத்தில் மதுரை மாநகரில் பெளத்தப்பள்ளி தனியே எடுத்துக் கூறும் முறையிற் சிறப்பிடம் பெற்றிருக்குமானால் அமணர்பள்ளியினை விதந்தெடுத்துக் கூறினாற்போன்று பெளத்தப் பள்ளியையும் தனியே விதந்து கூறியிருப்பர். அவ்வாறன்றி,

& به

வண்டுபடப் பழுநியதேனார் தோற்றத்துப் பூவும் புகையுஞ் சாவகள் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட்டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து வானமும் நிலனும் தாமுழுதுணருஞ் சான்ற கொள்கை சாயாயாக்கை ஆன்றடங்கறிஞர் செறிந்தனர் நோன்மார் கல்பொளிந்தன இட்டுவாய்க் கரண்டைப் பல்பொறிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கண்டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்பமேக்குயர்ந்த தோங்க இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்'

(மதுரைக் 475-488)