பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

335


எனவரும் பட்டினப்பாலையடிகளிற் குறிக்கப்பெற்றுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். "பகைவர் மனைவியராய்ட் போரிற் சிறைப்பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையினையுடைய குளத்திலே மூழ்கி அலகிட்டு மெழுகிய மெழுக்கத்தினையும் அந்திக் காலத்திலே கொளுத்தின அவியாத விளக்கினையும் உடையதாய் மக்கள் பலரும் சென்று மலர்துவித் தொழுவதற்குரிய தெய்வம் உறையும் துணினைத் தன்னகத்தேயுடையதாய்ப் புதியவர்கள் தங்குதற்கு இடமாகிய அம்பலம்" என்பது மேற்காட்டிய பட்டினப்பாலைத் தொடரின் பொருளாகும்.

கொண்டி மகளிராவார் பகைவர் மனைவியராய்ப் போரிற் சிறைப்பிடித்துக் கொணரப்பட்ட பெண்கள், பிறர்க்குரியராய அம்மகளிரை அவர்தம் கற்பியல் வாழ்வுக்கு இடர் நேராதவாறு மதித்து அவர்கள் தாம் விரும்பிய தெய்வவழிபாட்டில் உரிமையுடன் ஈடுபட்டு அமைதியாக வாழும்படி செய்த தமிழ் முன்னோரது அரசியலுணர்வும் நாகரிகப் பண்பாடும் யாவராலும் புகழ்ந்து போற்றத் தக்கனவாகும். “பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார். அதனால் தமக்குப் புகழுளதா மென்று கருதி” என நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கம் இக்கருத்தினை நன்கு வலியுறுத்துவதாகும்.

கந்து - தெய்வம் உறையும் தறி, துண் இன்னஉரு இன்னநிறம் என ஒருவராலும் உணர்தற்கு அரிய கடவுளை நிலையுடைய கந்தின் (துல்னின்) உருவில் நாட்டி வழிபடுதல் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்றுவரும் வழிபாட்டு முறையாகும். இத்தகைய தூணின் வடிவில் அமைந்ததே சிவநெறிச் செல்வர்களால் நெடுங்காலமாக வழிபடப்பெற்று வரும் சிவலிங்கத் திருமேனியாகும். இந்நுட்பம் காஞ்சியிற் கோயில் கொண்டருளிய இறைவனுக்குக் கம்பன் என வழங்கும் காரனப் பெயராலும்.

§§ * - * - לל கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

“மழபாடி வயிரத்து னே என்றென்றே

நான் அரற்றி நைகின்றேனே.”