பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


೯೯ಿಕ್ರಿà அப்பர் அருள்மொழிகளாலும் சிவபெருமானுக் குரிய ஸ்தானு என்னும் வடமொழிப் பெயர் வழக்காலும் நன்கு புலனாதல் காணலாம்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகையாகிய சங்கச் செய்யுட்களில் சிவபெருமானைக் குறித்தனவாகப் பின்வரும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன :

அந்திப் பசுங்கட் கடவுள், அருந்தவமுதல்வன், ஆதிரையான், ஆதிரைமுதல்வன், ஆல்கெழுகடவுள், ஆலமர்கடவுள், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், இமைய வில்வாங்கிய ஈர்ஞ்சடை அந்தனன், இறை, ஈசன், எரியுமிழ்கணிச்சியோன், ஏற்றுர்தியான், ஐந்தலையுயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை யொருவன், கடவுள், காரியுண்டிக் கடவுள், காலக்கடவுள், கொலைவன், கொன்றையலங்கலந்தெரியலான், சலதாரி, சிறருமுன்பினோன், செல்விடைப்பாகன், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோன், நீர் சடைக்கரந்தோன், நீலமணிமிடற்றொருவன், நீலமேனி வாலிழைபாகத் தொருவன், புங்கவம் ஊர்வோன், புதுத்திங்கட்கண்ணியான், பெரும்பெயர்க் கணிச்சியோன், பைங்கட் பார்ப்பான், மணிமிடற்றண்னல், மணிமிடற்றந்தனன், மணிமிடற் றெண்கையான், மணிமிடற்றோன், மழுவாள் நெடியோன், மறுமிடற்றண்ணல், முக்கட்செல்வன், முக்கணான், மூவெயில் முருக்கிய முரண்மிகுசெல்வன் எனவரும் இத்தொடர்கள், சிவபெருமானது திருமேனி வடிவினையும் வண்ணத்தினையும், அம்முதல்வனுக்குரிய ஊர்தி, கொடி, படை முதலியவற்றையும் மன்னுயிர்களைக் காத்தல் வேண்டி அவ்இறைவன் செய்தருளிய அருட் செயல்களையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

பத்துப்பாட்டுள் முதற்கண்னதாகிய திருமுருகாற்றுப் படையுள்,

“வெள்ளேறு.

வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்

உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண்