பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


னின்றும் இந்திரன் இரந்து வாங்கிக்கொண்டு தன் வச்சிரப்படையால் சிதைத்த கருவினைத் தவத்திற் சிறந்த முனிவர் எழுவரும் பெற்றுத் தமக்குத் தரிக்கவியலாமையின் இறைவன் கூறாகிய முத்தீக் குண்டத்திலே பெய்ததனைக் கூறிற்று. அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்றது, அவ்வாறு வேள்விக் குண்டத்திற்பெய்து சத்தி குறைந்த கருப்பத்தை அம்முனிவர் எழுவரும் தம் மனைவர்க்குக் கொடுக்க அவருள் அருந்ததி நீங்கலாகவுள்ள அறுவரும் அக்கருவினை விழுங்கிச் சூல் முதிரிந்து சரவனப்பொய்கையிற் பதுமப்பாயலிலே பெற்ற நிலையில் முருகப்பெருமால் ஆறு குழந்தை வடிவாக வளர்ந்தமை கூறிற்று. முருகப்பெருமானது தோற்றம் பற்றிய இப்புராண வரலாறு பாயிரும் பனிக்கடல்’ எனத் தொடங்கும் ஐந்தாம் பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றமை முன்னர் விளக்கப்பெற்றது. முருகவேட்டுத் தந்தையாகிய சிவபெருமான் கல்லால மரத்தின் கீழமர்ந்து முனிவர்க்கு அருமறைப் பொருளை அறிவுறுத்திய செய்தி, ஆல்கெழு கடவுட் புதல்வ’ எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடராலும், ஆலமர் செல்வன் அணிசால்மகன் (கலி. 83) எனவரும் கலித்தொகைத் தொடராலும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளல் எழுவருள் ஒருவனும் வெற்றி தரும் விற்படை யின்னும் யார்கண்ணும் ஆர்வ மொழியுடையவனுமாகிய ஆய் என்பான், பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தினையுடைய ஆடையினை ஆலின் கீழமர்ந்து அற முரைத்தருளிய நாயனாராகிய தென்முகக் கடவுள் திருமேனிக்கு நெஞ்சுமகிழ்ந்து கொடுத்தனன். இச்செய்தி,

'நிழல்திகழ்

நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும்’ (சிறுபாண். 94-99)

எனவரும் சிறுபாணாற்றுப் படைத் தொடரால் இனிது விளங்கும். இதனால் சிவபெருமானுக்குரியனவாக வைத்து வழிபடப்பெறும் பல்வேறு திருவுருவங்களில் ஆலின்