பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

339


கீழறமுரைத்த நாயனாராகிய தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) திருவுருவம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்பது நன்கு புலனாம்.

‘தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற்

றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தாழுருவிப்பொருப்பிற் பொருந”

(மதுரைக், 40-42)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடருக்கு “இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கு அரிய வலியினையுடைய பக்க மலையிலே விழுகின்ற அருவியினை யுடைய பொதியின் மலையிலிருக்கும் அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே” எனப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர், 'இராவணன் தென்றிசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார், இப்பெயர் பாண்டியற்கும் கூற்றுவற்கும் ஏற்று நின்றாற்போல அகத்தியனைத் தென்றிசையுயர்ந்த நொய்ம்மை போக இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான் என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல் டாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க............. இதனால் அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் ப்ாண்டியன் இருந்து தமிழாராய்ந்த சிறப்புக் கூறினார்” என விளக்கமும் வரைந்துள்ளார். இத்தொடரில் தென்னவன் என்றது இராவணனை' என நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளமை ஏற்புடையதேயாகும். எனினும் இங்குத் ‘தென்னவற் பெயரிய தொன் முதுகடவுள்' என்றது, முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமானை என்பது நச்சினார்க்கினியர்க்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்கள் கருத்தென்பது, “கூற்றுவனை யுதைத்த கடவுள் என்று இறைவனாக்கி 'அவன் பின்னர்’ என்றது அகத்தியனையென்று பொருள் கூறின், இறைவனுக்குத் தம்பியென்றல் சாலாமையானும், அப்பொருள் (தம்பியென்றபொருள்) தருங்காலத்து, முன்னவன் பின்னவன், முன்னோன் பின்னோன் என்றல்லது அச்சொல் நில்லாமையானும் அது பொருந்தாது” என