பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

341


முதலிய சில திருவிளையாடல்களுக்குரிய மரபுவழிச் செய்திகள் சில சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன என எண்ணுதற்கு இடமுண்டு.

“அடியிற் றன்னளவரசர்க் குணர்த்தி

வடிவேலெறிந்த வான்பகை பொறாது பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங்கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி திங்கட்செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணாயிரத்தோன் திறல்விளங்கு ஆரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன்வாழி முடிவளையுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழை யெய்தாதேகப் பிழையா விளையுட்பெருவளஞ்சுரப்ப மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீதுதிர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி”

(சிலப். காடுகாண். 17-29)

என வரும் சிலப்பதிகாரத் தொடரில் திருவிளையாடற் புரானச் செய்திகள் சிலவற்றுக்குரிய மூலங்கள் இடம் பெற்றுள்ளமை காணலாம். பாண்டியர் மரபு சிவபெருமா னொடு தொடர்புடையதாய்த் தெய்வநலம் பெற்றுத் திகழுந் திறத்தினைச் சேர முனிவராகிய இளங்கோவடிகள்,

“மறைமுது முதல்வன் பின்னர் மேய

பொறையுயர் பொதியிற் பொருப்பன்’

(சிலப் வேட்டுவவரி)

என வரும் தொடரில் தெளிவாகக் குறித்துள்ளார். இத்தொடர்ப் பொருளை விளக்க வந்த அரும்பத வுரையாசிரியர், “மறைமுது முதல்வன் - மாதேவன், இவன் பின்னர் அகத்தியராகியகடவுள், பொருப்பன் - பாண்டியன்’ எனப் பொருள் வரைந்துள்ளார். இங்குள்ள பின்னர் என்னும் இடப்பெயர் வழிமுறை என்ற பொருளைத் தருவதன்றிப் பின்வந்தவன் என்ற பொருளில் அகத்திய முனிவரைக் குறித்தல் இயலாது. எனவே மறைமுது முதல்வன் பின்னர்