பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

345


கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாராக இருத்தல் கூடும் எனக்கருதுவர் சிலர். பாடியோர் யாவராயினும் இப்பாடல் சங்ககாலச் செய்யுள் நடையினை அடியொற்றியதென்பதனை அறிஞர் பலரும் உடன்படுவர் என்பதில் ஐயமில்லை.

சுடர்விட்டொளிரும் தீயின் நிறத்தினையும் ஒவ்வாதென்று இகழ்ந்தாலொத்த செந்நிறவொளி வாய்ந்த திருமேனியை யுடையான், விரிந்த கொத்துக்களையுடைய அழகிய கொன்றை மலர்மாலையை அணிந்த மார்பினை யுடையான், உலக வுயிர்கட்கு இடர்விளைக்கும் பகைவராகிய அவுணர்கள் வாழ்ந்த முப்புரங்களையும் தீக்கு இரையாக்கிய (மேரு மலையாகிய) வில்லினை ஏந்தியவன், செறிந்த நள்ளிருளிலே சுடுகாட்டினையே அரங்காக விரும்பி ஆடும் கூத்தினை யுடையான், தொடையளவும் சார்ந்து ஒலித்து வெள்ளிய மணி ஆரவாரிக்கும் விழாவினையுடையான், நுண்ணிய கயிற்றாற் பிணிக்கப்பட்ட உடுக்கையினை இரட்டுறவொலிக்கும் விரலினையுடையான், (வலப்பக்கம் ஆணுருவும் இடப்பக்கம் பெண்ணுருவும் என) இரண்டுருவும் ஒருங்கியைந்த அம்மையப்பர் உருவுடையனாய் அவ்விரண்டுருவிற்கேற்ற இருவகையணிகளையும் பெற்ற அழகினை யுடையான், ஒத்த இளம் பிறை சேர்ந்து விளங்கும் நெற்றி யினையுடையான், கள்ாக்கனியொடு நிறத்தால் உறழும் நீலகண்டத்தையுடையான், (மன்னுயிர்களின் மும்மலப் பிணிப்பினைக் களைவது எனத்) தெளிந்த மூவிலைச் சூலமாகிய சுடர்விட்டொளிரும் படை யினை ஏந்திய காலத்தைக் கடந்த கடவுளாகிய இறைவனுக்கு வெற்றி மேன்மேல் உயர்வதாகுக!”

என்பது மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருளாகும். இப்பாடல் சிவபெருமான் திருமேனியின் எழில் வண்ணத்தினையும் அம்முதல்வன் அருட்செயல் களையும் பரவிப் போற்றும் முறையில் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும்.

இனி, சிவபெருமானைக் குறித்துப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள்